அமைச்சர் ஆதவின் ரூ.1 கோடி மான நஷ்ட வழக்கு; அபராதத்துடன் தள்ளுபடி செய்யக் கோரி ஸ்டாலின் மனு
சென்னை: அமைச்சர் ஆதவ் ரூ.1 கோடி கேட்டு தாக்கல் செய்துள்ள மான நஷ்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ரூ.258 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் தொடர்பான ஒரு சம்பவத்தில் ஜான் பிரிட்டோ என்பவர், அமைச்சர் ஆதவ் உறவினர் என்று கூறி திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி அவர் பதிவிட்டு இருந்தார்.
அமலாக்கத்துறை குறிப்பிட்டு இருக்கும் ஜான் பிரிட்டோ என்பவர் எனது உறவினர் கிடையாது என்று கூறிய அமைச்சர் ஆதவ், ரூ. 1 கோடி மானநஷ்ட ஈடு கோரி, ஸ்டாலினுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கை தாக்கல் செய்தார். இது தொடர்பாக பதிலளிக்குமாறு ஸ்டாலினுக்கும், திமுக ஐடி பிரிவுக்கும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
இந் நிலையில் இவ்வழக்கு இன்று (செப்.22) மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டாலின் தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது;
ஆதவ் மாமனார், மாமியார், மாமியாருடைய சகோதரர் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறையின் வழக்கு இருக்கிறது. ஆதவும் சிபிஐ வழக்கை எதிர்கொண்டு உள்ளார். சுத்தமான கரங்களால் அவர் நீதிமன்றத்தை அணுகவில்லை என்பதால் அவர் எந்த நிவாரணமும் கோர முடியாது.
ஜான் பிரிட்டோவை தொடர்புபடுத்தி பதிவுகள் வெளியிடுமாறு திமுக ஐடி பிரிவுக்கு ஒப்புதலோ, அறிவுறுத்தலோ நான் வழங்கவில்லை. கட்சியின் பிரிவுகள் சமூக வலைதளங்களில் வெளியிடும் கருத்துகளுக்கு என்னை பொறுப்பாக்க முடியாது. ஆதவின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறுவதில் எந்த ஆதாரமும் கிடையாது. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய திமுக ஐடி பிரிவு அவகாசம் கேட்டதால், அக். 26ம் தேதி வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு வீடியோ!
அமைச்சர் ஆதவ் குடும்பம் மீது பல வழக்கு: ஐகோர்ட்டில் ஸ்டாலின் பரபரப்பு மனு தாக்கல் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் https://www.youtube.com/live/p5OgN5tMr24?si=Ztjq0wFWaNXQK_Ex