ஆப்பிள் பே vs UPI : இரண்டிற்கும் இருக்கும் வித்யாசங்கள்: மோசடிகளை தடுக்க ஆப்பிள் பே கொண்டு வந்துள்ள டோக்கனைசேஷன்
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையில் அவ்வப்போது பல மாற்றங்கள் நிகழ்ந்து வருவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் தற்போது apple pay என்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் UPI வழியே பணம் செலுத்தி வந்தவர்கள் ஆப்பிள் போன் அல்லது வாட்ச் வைத்திருந்தால் இந்த ஆப்பிள் பே செயலி மூலம் பணம் செலுத்தலாம்.இதனால் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறையை மேலும் வேகமானதாகும் பாதுகாப்பானதாகவும் மாற்றுகிறது. இந்த சேவை தற்போது ஆக்சிஸ் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் UPI முறைக்கும் இந்த ஆப்பிள் பே விற்கும் இடையே இருக்கும் வித்யாசங்கள் மற்றும் மோசடிகளில் இருந்து ஆப்பிள் பே எவ்வாறு பாதுகாப்பு தருகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம் ஆப்பிள் பே டோக்கனைசேஷன் பாதுகாப்புகடைகளில் கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது அல்லது கிரெடிட் கார்டின் 16 எண்களை பதிவிடும் மோசடிக்காரர்கள் உங்களுடைய தகவல்களை திருடுவதற்கு வாய்ப்புள்ளது. இதுபோன்ற மோசடிகளை தடுப்பதற்கு ஆப்பிள் பே டோக்கனைசேஷன் என்ற முறையை கொண்டுவந்துள்ளதுஉங்களுடைய ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டை ஆப்பிள் வாலெட்டில் சேர்க்கும்போது அது உங்களுடைய கார்டு எண்களை சேமிக்காமல் அதற்கு பதிலாக ஒரு தனி டோக்கனை உருவாக்குகின்றது.கடைகளில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது அந்த கடைக்கு இந்த டோக்கன் மட்டும் தான் செல்லும். உங்களுடைய 16 இலக்க எண் என்பது ரகசியமாக பாதுகாக்கப்படும்உங்களுடைய iphone காணாமல் போனாலும் உங்களை தவிர வேறு யாராலும் பரிவர்த்தனை செய்ய முடியாது. நீங்கள் Find My செயலி மூலம் இதனை உடனடியாக முடக்க முடியும்ஆப்பிள் பே vs UPI வேறுபாடுஆப்பிள் பே தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இது UPI க்கு போட்டியாக வருமா ? என்ற சந்தேகம் பலரிடம் இருக்கின்றது. ஆனால் கண்டிப்பாக ஆப்பிள் பே UPI க்கு போட்டியாக வராது என்பதே உண்மை. இரண்டும் வெவ்வேறு விதமான பயன்பாட்டில் இருக்கின்றதுUPI யில் சாதாரண கடைகளில் கூட கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்ப முடியும். ஆனால் ஆப்பிள் பே சாதாரண கடைகளில் இருக்கும் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் வசதி இன்னும் அறிமுகப்படுத்தவில்லை