Tamil Nadu
September 20, 2026 02:02 AM
15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்
சென்னை: தமிழகத்தில் இன்று, 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நீலகிரி, கோவை, கடலுார், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துார், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், பெரம்பலுார், அரியலுார், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu