Politics
October 06, 2026 07:04 PM
வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி: அமைச்சர்கள் மேல்முறையீடு
சென்னை:பாலியல் வழக்கில் கைதான கிரானைட் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு காப்பாற்றியது என அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டினர்.
தவெகவின் ஐடி பிரிவும், திமுக அரசுக்கு எதிராக சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டது. நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, தவெக ஐடி பிரிவினர் ஆகியோர் திமுகவை விமர்சிக்க தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட கோரி திமுக பொதுச்செயலர் துரைமுருகன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி வழங்கினார்.
இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
Politics