வட்டி விகிதத்தை தவிர ரூபாய் மதிப்பை மீட்க RBI யின் புதிய மாஸ்டர் பிளான்
இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் சரிவை கட்டுக்குள் வைத்திருக்கும் வட்டி விகிதங்களை உயர்த்தியது. இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.50% என மாற்றியமைத்தது. இதனைதொடர்ந்து டாலரின் உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் சரிவு நேரடியாக சாதாரண மக்களை பாதித்தது. வங்கியில் கடன் வாங்கியிருப்பவர்கள் வட்டி விகித உயர்வால் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதன் காரணமாக கடனுக்கான மாத EMI அதிகரிக்கும் என தெரிகின்றது.மேலும் சில பொருட்களின் விலை உயர்வால் நம் குடும்பத்தின் வரவு செலவுகளில் தாக்கம் ஏற்படும் என தெரிகின்றது. இந்நிலையில் RBI ரெப்போ வட்டியை உயர்த்துவதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தலாம் என நினைத்தார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பது போல தான் தெரிகின்றது. தற்போதைய நிலவரப்படி ஒரு டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு என்பது 95 வரை உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான தொடர்ந்து இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வரும் நிலையில் ரூபாய் மதிப்பை காப்பாற்ற RBI வேறு சில வழிகளை கையிலெடுத்துள்ளதுRBI யின் நடவடிக்கைகள்வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு டாலர் தேவைப்படுகின்றது. இதன் காரணமாக டாலர் மதிப்பு உயர்ந்து வருகின்றது. இதனை தடுக்கும் வகையில் RBI நேரடியாகவே எண்ணெய் நிறுவனங்களுக்கு டாலர் வழங்க முடிவெடுத்துள்ளதுசந்தையில் சிலர் ரூபாய் மதிப்பு மேலும் சரியும் என பந்தயம் கட்டி லாபம் பார்ப்பார்கள். இதனால் தேவையில்லாமல் ரூபாய் மதிப்பு குறையும்.இதனை கட்டுப்படுத்த RBI கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடாலர் தேவையை முறைப்படுத்துவதன் மூலம் இந்திய மதிப்பை உயர்த்த RBI திட்டமிட்டுள்ளது. அதாவது வெளிநாட்டு வர்த்தகத்தில் டாலரின் தேவையை குறைத்து சீராக்கும் நிலையில் டாலர் தட்டுப்பாட்டை நம்மால் தடுக்க முடியும் என RBI நம்புகின்றதுஇந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் மட்டும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தமுடியாது என கருத்தியிருக்கின்றது. அதன் காரணமாக தான் வேறு சில யுக்திகளை RBI தற்போது கையிலெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது