விஜய்யோட கடைசி பட வசூலையே 3 நாளில் முடித்த ரஜினிகாந்த்.. ஜெயிலர் 2 ரெக்கார்ட்டை இனி யார் நெருங்குவார்?
சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி உள்ளன. இதில், பாக்ஸ் ஆபீஸ் ரீதியாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்றால் அது முதலமைச்சர் விஜய் நடித்த கடைசி படமான ஜன நாயகன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 ஆகிய படங்கள் தான்.
ஜன நாயகன் திரைப்படம் பகவந்த் கேசரி ரீமேக் என்றதுமே படத்தின் மீது பெரிய ஹைப் இல்லாமல் போய் விட்டது. மேலும், படத்தை ரிலீஸ் பண்ண விடாமல், ஏகப்பட்ட அரசியல் சதி வேலைகளும் நடைபெற்றன.
மொத்த படத்தையும் ஹெச்டி தரத்தில் லீக் செய்தும் விஜய்யின் கடைசி படத்தை காலி செய்து விட்டனர். ஆனாலும், படம் வெளியான பிறகு சுமார் 300 கோடி அளவுக்கு வசூல் ஈட்டியது. படத்தின் பட்ஜெட் அதை விட அதிகம் என்பதால், ஜன நாயகன் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படமாக மாறவில்லை.
எதிர்பாராத வெற்றித் தந்த சூர்யா: இந்த ஆண்டு ரசிகர்களே எதிர்பார்க்காத வெற்றி என்றால் அது சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் தான். கங்குவா, ரெட்ரோ படங்களின் சொதப்பல்களுக்குப் பிறகு வெளியாகி 340 கோடி அளவுக்கு பாக்ஸ் ஆபீஸில் வசூல் ஈட்டியது. கருப்பு படத்தைத் தொடர்ந்து மமிதா பைஜுவுடன் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படமும் 260 கோடி வசூல் செய்து கோலிவுட்டை காப்பாற்றியது.
3 நாட்களில் முடித்த ரஜினிகாந்த்: இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய கருப்பு, ஜன நாயகன், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உள்ளிட்ட படங்களின் லைஃப் டைம் வசூலை வெறும் 3 நாட்களிலேயே 300 கோடியை கடந்து ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 முடித்து விட்டது. ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் இந்தியளவில் 55 கோடி ரூபாயும் உலகம் முழுவதும் 100 கோடி வசூலை கடந்து மொத்தமாக இதுவரை முதல் 4 நாட்களில் 424.25 கோடி கிராஸ் வசூலை ஜெயிலர் 2 அள்ளி இந்த ஆண்டின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியுள்ளது.
விஜய்யும் இல்லை.. இனிமே யார் ரஜினியை நெருங்குவார்?: 2023ம் ஆண்டு ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் முன்னாடி ரிலீஸ் ஆகி 600 கோடி வசூலை ஈட்டியது. அதன் பின்னர் வெளியான விஜய்யின் லியோ திரைப்படமும் 600 கோடி வசூலை எட்டியது. இருவருக்கும் இடையேயான போட்டி சூப்பராக இருந்தது. ஆனால், இந்த முறை விஜய்யின் கடைசி படமே ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் வசூலில் பாதி தான் இருக்கும் என்கிற நிலை உருவாகியுள்ளது. இதற்கு மேல் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 ரெக்கார்டை கடக்க அல்ல நெருங்கக் கூடிய படத்தை எந்த நடிகர் கொடுப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வி தான்.
சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், அஜித்?: தீபாவளிக்கு சூர்யாவின் சீன் திரைப்படம் வெளியாகிறது. ஆனால், அந்த படமும் இவ்வளவு பெரிய வசூலை ஈட்டுமா? என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லி விடலாம். நவம்பர் மாதம் 20ம் தேதி தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ஓம் படத்தில் மம்மூட்டியும் உள்ள நிலையில், அமரன் பட இயக்குநர் பாக்ஸ் ஆபீஸில் என்ன மேஜிக் செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவினாலும், ஜெயிலர் கிட்டக் கூட வரமுடியாது என்கின்றனர். சிவகார்த்திகேயனின் சேயோன் படம் கூட இவ்வளவு பெரிய வசூலை ஈட்டுமா என்றால் வாய்ப்பில்லை ராஜா என்றே ரசிகர்கள் கூறிவிடுவார்கள். அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து, நிறைவடைந்து அந்த படம் எந்தளவுக்கு வசூல் ஈட்டும் என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.
சூப்பர் ஸ்டாரே முடித்தால் தான் உண்டு: ஜெயிலர் 2 படம் இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸில் செய்து வைக்கப்போகும் மிகப்பெரிய சாதனையை இனிமேல் முறியடிக்க வேண்டும் என்றால் ரஜினிகாந்தின் தர்மன் அல்லது ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் நெல்சன் படம் மூலம் மீண்டும் ரஜினிகாந்தே முடித்தால் தான் உண்டு என்கின்றனர்.