📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 25, 2026 04:03 PM

வெள்ளை மாளிகைக்குள் நுழைய செய்தி நிறுவனங்களுக்கு டிரம்ப் விதித்த தடை நீக்கம்

வெள்ளை மாளிகைக்குள் நுழைய செய்தி நிறுவனங்களுக்கு டிரம்ப் விதித்த தடை நீக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அந்நாட்டு ஊடகங்களுக்கு இடையே நீண்ட நாட்களாகவே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. தமக்கு எதிராக செய்தி வெளியிடும் நிறுவனங்களை டிரம்ப் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார். இதன் உச்சக்கட்டமாக, சி.என்.என், எம்.எஸ் நவ் மற்றும் பொலிடிகோ ஆகிய 3 முன்னணி செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து செய்தி சேகரிக்க அதிரடி தடை விதித்தார்.

டிரம்பின் இந்த உத்தரவு பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டிரம்ப் அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்கா பெடரல் கோர்ட்டு நீதிபதி திமோதி கெல்லி, டிரம்ப்பின் உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தடை செய்யப்பட்ட 3 செய்தி நிறுவனங்களுக்கும் வெள்ளை மாளிகைக்குள் சென்று செய்தி சேகரிப்பதற்கான அனுமதியை உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் என்றும் டிரம்ப் அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.