📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 09, 2026 04:00 PM

வெளியீட்டுக்கு முன்பே ‘ஜெயிலர் 2’ வசூல் வேட்டை

வெளியீட்டுக்கு முன்பே ‘ஜெயிலர் 2’ வசூல் வேட்டை

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘ஜெயிலர் 2’.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வெளியீட்டுக்கு முந்தைய முன்பதிவில் மட்டுமே ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் ரஜினிகாந்த் மீண்டும் களமிறங்கியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் நிலையில், ‘ஜெயிலர் 2’வுக்கான திரையரங்க டிக்கெட் முன்பதிவு அண்மையில் இணையத்தில் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில மணிநேரத்திலேயே தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடக, கேரள மாநிலங்களிலும் அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் அதிவேகமாக விற்றுத் தீர்ந்தன.

இதுவரை வெளியான அதிகாரபூர்வ மற்றும் திரை வர்த்தக தகவல்களின்படி, வெளியீட்டிற்கு முந்தைய டிக்கெட் முன்பதிவிலேயே இப்படம் ரூ.11 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதால் வருகிற 15ஆம் தேதி வெளியாகும் முதல் நாள் வசூல் மட்டுமே முந்தைய பல திரையரங்கச் சாதனைகளை எளிதில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வசூல் சாதனை

மேலும், தொடர் விடுமுறை நாள்கள் வருவதால் படம் மிக விரைவில் பல நூறு கோடிகளை வசூலிக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தொடர்ந்து இந்தப் படத்தின் டிரெய்லர் சில நாள்களுக்கு முன்பு வெளியானது. அது, படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ‘ஜெயிலர் 2’ அதன் முதல் பாகத்தைவிட பன்மடங்கு அதிக வசூலைப் பெறுவதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’, அதற்கு முன்பு வெளியான ‘அண்ணாத்த’ படம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யாத நிலையில் ரஜினிகாந்துக்கு ஒரு வகையில் மறுவாழ்வு அளித்த படமும்கூட.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சென்ற ஆண்டு லோகே‌ஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கூலி’ படம் சிறிதளவு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ‘ஜெயிலர் 2’ அதைச் சரிசெய்யும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.