தொடர் சரிவுக்கு பின் மீண்டது நிப்டி நிற்குமா, இது நிலைக்குமா?
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில், தொடர்ந்து 8 வாரங்களாக சரிவை சந்தித்து வந்த நிப்டியும், சென்செக்ஸூம் நேற்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட ஒரு சதவீதத்துக்கு மேல் உயர்ந்து வர்த்தகமானது. சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 72,631 புள்ளிகள் வரையும், நிப்டி 22,621 புள்ளிகள் வரையும் அதிகரித்து வர்த்தகமானது.
கடந்த ஆகஸ்ட் 16 முதல் தொடங்கிய இந்த 8 வார சரிவில், நிப்டி குறியீடு கிட்டத்தட்ட 8.70 சதவீதம் வரை தனது மதிப்பை இழந்துள்ளது. தற்போதைய இந்த திடீர் ஏற்றம் சந்தை முற்றிலும் மீண்டுவிட்டதன் அடையாளமா அல்லது மீண்டும் சரிவதற்கு முன்னால் ஏற்படும் 'டெட் கேட் பவுன்ஸ்' எனப்படும் மாயையா என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சந்தை அல்லது ஒரு பங்கு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும்போது, இடையில் தற்காலிகமாக ஏற்படும் ஒரு சிறிய விலை உயர்வையே 'டெட் கேட் பவுன்ஸ்' என்று அழைக்கிறார்கள். அதாவது, ஒரு செத்த பூனையாக இருந்தாலும், அதை மிக உயரத்திலிருந்து கீழே போட்டால் அதுவும் கூட சற்று துள்ளத்தான் செய்யும்.
அதே போல, தற்காலிக உயர்வு, வீழ்ச்சியடைந்து வரும் பங்கின் மதிப்பு மீண்டும் மீள தொடங்கிவிட்டது போன்ற ஒரு போலி தோற்றத்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தும். ஆனால், சிறிது நேரத்திற்கு பிறகு பங்கின் விலை மீண்டும் மிக மோசமாக வீழ்ச்சியடைய தொடங்கும்.
வரலாற்று பாடம்
1992க்கு பிறகு, தொடர்ந்து 8 வாரங்கள் சந்தை சரிவடைவது இதுவே முதல் முறை. இதற்கு முன் 1993ல் 8 வாரங்களும், 2001ல் 9 வாரங்களும் சரிவு ஏற்பட்டது. இத்தகைய தொடர் சரிவுக்கு பிறகு சந்தை மீளும் போது, நிப்டி சராசரியாக:
3 மாதங்களில்
12 மாதங்களில்
தற்போதைய தொழில்நுட்ப நிலவரம்
20 நாள் நகரும் சராசரிக்கு மேல் உள்ள பங்குகள்
50 நாள் நகரும் சராசரிக்கு மேல் உள்ள பங்குகள்
200 நாள் நகரும் சராசரிக்கு மேல் உள்ள பங்குகள்
52 வார சரிவுக்கு அருகில் உள்ள பங்குகள்
குறுகிய காலத்தில் சந்தையில் அதிக அளவு விற்பனை நடந்துள்ளதால் இந்த தற்காலிக ஏற்றம் இயல்பானதே. ஆனால் நீண்டகால தொழில்நுட்ப அம்சங்கள் இன்னும் சந்தை முழுமையாக தரைதட்டி மீண்டுவிட்டதை உறுதிப்படுத்தவில்லை. நிப்டி 22,600 புள்ளிகளுக்கு கீழே இருக்கும் வரை, மீண்டும் 20,500 புள்ளிகள் வரை சரிய வாய்ப்புள்ளது.தொடர் சரிவால் லார்ஜ்-கேப் பங்குகளின் மதிப்பு மிகவும் சாதகமான விலைக்கு வந்துள்ளது. மேலும், செப்டம்பர் மாத ஆட்டோமொபைல் விற்பனை தரவுகள் நாட்டின் அடிப்படை பொருளாதாரம் பலமாக இருப்பதை உறுதி செய்கின்றன. நிப்டி 22,600 - 22,400 என்ற முக்கிய கட்டுப்பாட்டு எல்லையை கடந்து நிலைபெறும் வரை, அவசரப்பட்டு மொத்த பணத்தையும் முதலீடு செய்யாமல், முறையான எஸ்.ஐ.பி., அல்லது தவணை முறை முதலீட்டு உத்தியை கையாள்வதே சிறு முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பானது என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
1 கடந்த 6 வர்த்தக தினங்களில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் 43,687 கோடியை இந்திய சந்தையிலிருந்து வெளியே எடுத்திருப்பது
2 நி ப்டி தனது 200 வார சராசரிக்கு கீழே சரிந்திருப்பது
3 கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் மற்றும் அமெரிக்க பத்திரங்களின் வட்டி விகிதம் உயந்திருப்பது
4 ரிசர்வ் வங்கி தனது கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவது.