📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 04, 2026 08:04 PM

திருத்தணியில் பக்தர்கள் மீது கோபுரக் கற்கள் விழுந்து விபத்து! 4 பேர் படுகாயம்!

திருத்தணியில் பக்தர்கள் மீது கோபுரக் கற்கள் விழுந்து விபத்து! 4 பேர் படுகாயம்!

திருத்தணியில் பக்தர்கள் மீது கோபுரக் கற்கள் விழுந்து விபத்து! 4 பேர் படுகாயம்!

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் சாமிதரிசனத்திற்க்காக காத்திருந்த பக்தர்கள் மீது கோபுர கற்கள் விழுந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். அரும்படை வீடுகளில் ஐந்தாம்படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது, பொதுவழியில் சாமிதரிசனம் செய்யும் இடத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுது பொதுமக்கள் நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று காளி கோபுரத்தில் இருந்து சிலைகள் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களை அறநிலையத்துறை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி மலை கோயிலில் இருந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிக்சை அளிக்கப்பட்டு தலையில் நன்கு படுகாயம் அடைந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிக்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர், முதற்கட்டமாக இவர்கள் ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் என்றும் தெரிவித்துள்ளனர், மேலும் இது தொடர்ந்து காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.