📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 15, 2026 03:03 PM

Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி

Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி

Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி

Thirumavalavan On SIR: கொளத்தூர் தொகுதி வேண்டாம் தொகுதி மாறி போட்டியிடுங்கள் என நான் சொன்னதை ஸ்டாலின் கேட்கவில்லை என, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan On SIR: கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோற்பார் எனக்கு கிடைத்த தகவலை திமுகவிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன் என, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

INDI கூட்டணி ஆர்பாட்டம்

வாக்காளர் திருத்தப் பட்டியலில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாஜகவிற்கு சார்பாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி INDI கூட்டணி சார்பில் சென்னையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அந்தவகையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தலைமைதேர்தல் ஆணையரின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.

”ராகுல் தரையில் உருண்டு போராடி வருகிறார்”

தற்போதய சூழலில் ஞானேஷ்குமார் பதவி விலகினால் மட்டுமே போதுமா? ஒட்டுமொத்தத்தில் இந்திய அரசியல்மைப்பு சட்டத்தையும் ,ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு முதற்படியாக தான் சங் பரிவார் அமைப்புக்கு துணைபோன தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சாலைகளில் படுத்து உருண்டு போராடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக INDI கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிரமாக போர்க்குரல் எழுப்பி வருகின்றனர். அடுத்தடுத்து போராட்டங்களும் முன்னெடுக்கப்பட உள்ளனவாம்.

சதி செய்யும் பாஜக:

பாரதிய ஜனதா கட்சியின் முகத்திரை கிழ்ந்துவிட்டது. அவர்களது வெற்றி என்பது திட்டமிட்டு செய்யப்பட்ட சதியின் விளைவு. குறிப்பாக மேற்குவங்கம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களை குறிவைத்து அவர்கள் இந்த வேலையை செய்துள்ளனர். தென்னிந்திய மாநிலங்களில் அவர்களால் கைவரிசை காட்ட முடியாது. இங்கே அவர்களுக்கு எந்த வேரும் இல்லை. ஒருவேளை இங்கு பாஜக 10 இடங்களில் வெற்றி பெற்றது என்று காட்டினால் யாராலும் நம்ப முடியாது. தமிழ்நாட்டிலோ, கேரளாவிலோ அவர்களால் எதையும் அசைக்க முடியாது என்கிற அளவிற்கு பாஜகவையும், ஆர்எஸ்எஸ் அமைப்பையும் இந்த மாநில மக்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். மத்திய இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் வெற்றி பெற்றாலோ போதும் அவர்களுக்கான தனிப்பெரும்பானமை கிடைத்துவிடும்.

இதையும் படியுங்கள்: Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்

”தோற்கடிக்கப்பட்ட தலைவர்கள்”

அந்த வரிசையில் தான் இந்த கைவரிசையை காட்டி தங்களது அரசியல் பகைவர்கள் மற்றும் எதிர்கள் அத்தனை பேரையும் சொல்லி வைத்தாற்போல் காலி செய்து வருகிறார்கள். கெஜ்ரிவால், மம்தா, பினராயி விஜயன் மற்றும் தமிழ்நாட்டிலேயே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வந்தபோது, இவர்கள் எல்லாம் தன்னியல்பாக தோற்றவர்களாக தெரியவில்லை என்றேன். குறிவைக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள் என்று நான் கூறினேன். தமிழ்நாட்டில் மட்டும் 97 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

”ஸ்டாலின் தோற்பார் என முன்கூட்டியே சொன்னேன்”

கொளத்தூர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முன்பே இந்த தகவல் கிடைத்ததும், இதை ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். சேகர்பாபுவிடமும் எடுத்துச் சொன்னேன். யாரோ ஒரு பெண்மணி என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு சதி நடக்கிறது, கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி பெறுவது கடினம் என கூறினார். முதல்முறை நான் அலட்சியப்படுத்தினார்லும், மீண்டும் மீண்டும் அவர் சொல்லவே, சேகர்பாபுவிடம் பேச வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன். அவர்கள் கலந்துரையாடினார்கள். அதற்கு பின் எனக்கு வாய்ப்பு கிடைத்து ஸ்டாலினை நேரில் சந்தித்தபோதும் இந்த விவகாரத்தை எடுத்துச் சொல்லி, ஏன் தொகுதி மாறி நிற்கக் கூடாது? என கேட்டேன். ஆனால், அப்படியெல்லாம் இல்லை நிர்வாகிகள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். யாருடைய பெயர்கள் எல்லாம் தவறாக நீக்கப்படவில்லை என ஸ்டாலின் கூறினார். சேகர்பாபுவிடமும் மீண்டும் வலியுறுதினேன். ஆனால் எந்த தவறும் இல்லை என அவர்கள் கூறினர். அப்படி இருந்தும் ஒரு லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்” என திருமாவளவன் பேசினார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி