📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 17, 2026 01:02 AM

தேசியக் கொடி ஏந்தி சென்ற அபிஜித், நேஹா போரா கைது: டெல்லி போலீஸ் நடவடிக்கை

தேசியக் கொடி ஏந்தி சென்ற அபிஜித், நேஹா போரா கைது: டெல்லி போலீஸ் நடவடிக்கை

தேசியக் கொடி ஏந்தி சென்ற அபிஜித், நேஹா போரா கைது: டெல்லி போலீஸ் நடவடிக்கை

புதுடெல்லி: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப்​பணி (எஸ்ஐஆர்) நட​வடிக்​கை​யில் முறைகேடுகள் நடை​பெறு​வ​தாக புகார் எழுந்​தது. இதையடுத்து, தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக்​கோரி, கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்​பில், டெல்​லியில் போராட்​டம் அறி​விக்​கப்​பட்​டது. ஆனால், போராட்​டத்​துக்கு அனுமதி மறுத்த டெல்லி போலீஸ் ஜந்​தர் மந்​தர் பகுதியை போராட்​டம் நடத்​து​வதற்​கான களப் பட்​டியலில் இருந்து நீக்கி உத்​தர​விட்​டது. இந்த தடையை மீறி சிஜேபியின் முக்கிய நிர்​வாகி​களான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்​கியா ஷிண்டே ஆகியோர் ஜந்​தர் மந்​தர் பகுதி​யைச் சுற்றி அமைக்​கப்​பட்​டிருந்த பாது​காப்பு அரண்​களைத் தாண்டி உள்ளே நுழைய முற்​பட்​டனர்.

கையில் தேசி​யக் கொடியுடன் ஜந்​தர் மந்​தரில் நுழைந்த அவர்​களை டெல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதை கண்டித்து டெல்லி கன்னாட்பிளேஸ், சென்ட்ரல் பார்க் பகுதியில் தேசிய கொடியை ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று அபிஜித் தீப்கே அழைப்பு விடுத்திருந்தார். இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தான் தங்கியிருந்த ஜாண்டேவாலன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அபிஜித் கிளம்பினார். அவரை தடுத்து நிறுத்திய டெல்லி போலீசார் அவரை கைது செய்தனர்.

முன்னதாக, அபிஜித் தீப்கேவை அவர் தங்கி இருந்த இல்லத்தில் நேற்று காலை அவரை சந்தித்த டெல்லி போலீஸ் அதிகாரிகள், அவரிடம் இரண்டு நோட்டீஸ்களை வழங்கி உள்ளனர். அதில் ஒன்று, சென்ட்ரல் பார்க் பகுதியில் கூடுவதற்கு தடை இருப்பதால் அவர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதே போல் மூவர்ண கொடி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய மாணவர் சங்கத்தினர்(ஏஐஎஸ்ஏ) நேஹா போரா தலைமையில் மண்டி அவுஸ் அருகில் இருந்து ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த இரு இடங்களிலும் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தால் தங்கள் வியாபாரம் ரூ.250 கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டுள்தால், அதற்கு தடை கோரி வணிகர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்ஷி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த்,” வர்த்தகம் தொடர்ந்து கடும் பாதிப்பை சந்தித்தால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக தலையிடும். இருப்பினும் இந்த வழக்கில் தற்போது எந்தவித தடையோ அல்லது இடைக்கால உத்தரவோ பிறப்பிக்க முடியாது என்றார்.

உடனே விடுவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: அபிஜீத் தீப்கே எங்கே? நேஹா போரா எங்கே? அவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதை கூட தெரிவிக்காமல் கைது செய்து வைத்திருப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலும், மனிதநேயத்துக்கு எதிரானதும் ஆகும். ஒன்றிய அரசு அவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும். போராட்டத்தை ஒடுக்க நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அதனை மேலும் வலுப்படுத்தவே செய்யும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதை தவிர ஒன்றிய பாஜ அரசுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

கன்னாட்பிளேஸில் குவிந்த இளைஞர்கள்

தீப்கே, நேஹா போரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட போதிலும் போராட்டம் அறிவிக்கப்பட்ட இடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். அவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவரை கைது செய்ய வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் கைது செய்யப்பட்ட நேஹா போரா அடையாளம் தெரியாத இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அவரது உதவியாளர் குற்றம் சாட்டினார். நேஹா போரா தனியாகக் கைது செய்யப்பட்டு, அடையாளம் தெரியாத இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் செல் போனும் இல்லை. மீண்டும் ஒரு கடத்தல்? என்று அவரது எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டிருந்தது.