📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 24, 2026 10:05 AM

The Paradise X Review: சொர்க்கமா? நரகமா?.. நானியின் தி பாரடைஸ் படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனம்!

The Paradise X Review: சொர்க்கமா? நரகமா?.. நானியின் தி பாரடைஸ் படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனம்!

சென்னை: ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, மோகன் பாபு, கயாடு லோஹர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள தி பாரடைஸ் திரைப்படம் நேற்று இரவே தெலுங்கில் ஸ்பெஷல் ப்ரீமியர் காட்சியாக வெளியாகி விட்டது. தமிழில் இன்று படம் வெளியாகிறது.

தெலுங்கு வெர்ஷனில் படம் பார்த்த ரசிகர்களும் தமிழ் வெர்ஷனில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பார்த்த ரசிகர்களும் நானியின் தி பாரடைஸ் படம் அடுத்த டாக்ஸிக் என நெகட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகின்றனர்.

படத்தின் ரிசல்ட் இப்படித்தான் வரும் என முன்னதாகவே கணித்த நிலையில் தான் படக்குழு டிரைலரை வெளியிடவில்லை என்றும் மோசமான விமர்சனங்களை கொடுப்பதற்கு இடைக்கால தடையை பெங்களூர் நீதிமன்றத்திலும் பெற்றனர் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கயாடு லோஹர் தான் ஆறுதல்: நானி நடித்துள்ள தி பாரடைஸ் படத்தில் ஒரே ஆறுதலே நடிகை கயாடு லோஹர் தான். இந்த படத்தில் இம்மார்ட்டல் படத்தை தாண்டி கவர்ச்சியில் முழு ட்ரீட் வைத்துள்ளார் என்றும் அவரது நடிப்பை பார்க்க வேண்டுமானால் டிக்கெட் எடுத்து தி பாரடைஸ் படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்றும் ஆனால், படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தசரா போல தரமான படத்தைக் கொடுக்காமல் இந்த முறை சொதப்பி விட்டார் என்கின்றனர்.

ரொம்ப மோசமான படம்: இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே ரொமப்வே மோசமான படமாக தி பாரடைஸ் உள்ளது என இந்த ரசிகர் 2 ஸ்டார் மட்டுமே கொடுத்துள்ளார். முதல் பாதிக்கு மேல் என்ன செய்வதென்றே தெரியாமல் இயக்குநர் குழம்பிப் போனது தான் படம் படுத்துவிடக் காரணம் என்று கூறுகிறார்.

எமோஷனல் உலகம்: தி பாரடைஸ் படம் வெறும் ஆக்‌ஷன் படம் மட்டுமல்ல. இந்த படத்தில் ஒரு எமோஷனல் உலகத்தையே இயக்குநர் பில்ட் செய்துள்ளார். நானி நடிப்பில் மொத்த படத்தையும் தூக்கிப் பிடித்துள்ளார். மற்றவர்கள் சொல்வது போல எல்லாம் மோசமான படம் அல்ல. நல்லாவே இருக்கு என இந்த நெட்டிசன் 3.25 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார்.

இதெல்லாம் நல்லா இருக்கு: டாக்ஸிக் படத்துக்கு டார்ச்சர் என போட்டது போல நானியின் தி பாரடைஸுக்கு கிறிஸ்டோபர் கனகராஜ் ஒரே வார்த்தையில் முடித்து விடாமல் படத்தில் முதல் 20 நிமிடங்களும் இடைவேளை காட்சி மற்றும் கேசிஆர் வரும் இடம் எல்லாம் சிறப்பாக உள்ளது எனக் கூறியுள்ளார். நானிக்கு மாஸ் அவதார் செட்டே ஆகவில்லை என்றும். காமெடி வில்லன், டம்மி கயாடு லோஹர், அம்மா - மகன் எமோஷனல் காட்சிகள் ஒர்க்கவுட் ஆகவில்லை. Bad Watch என பதிவிட்டுள்ளார்.