📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 06, 2026 04:03 PM

தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக எம்எல்ஏ ஆஸ்டின் புகார்

தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக எம்எல்ஏ ஆஸ்டின் புகார்

தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக எம்எல்ஏ ஆஸ்டின் புகார்

சென்னை: கடந்த பொதுத்தேர்தலில் ரூ.31 கோடி செலவு செய்ததாக சத்தியபாமா பேசியதாக வீடியோ ஒன்று சர்ச்சையாக நிலையில் அது தொடர்பாக திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம்ரூ.31 கோடி செலவு செய்ததாகக்கூறும் சத்தியபாமா, தேர்தல் ஆணையத்தில் கணக்கு காட்டினாரா..? என திமுக கேள்வியெழுப்பியுள்ளது.

இது தொடர்பாக திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கூறியதாவது:

ஒரு வேட்பாளார் தேர்தல் சம்பந்தமாக செலவு செய்யக்கூடியத் தொகை, அது தேர்தல் தொடர்பாக பிரச்சாரமாக இருந்தாலும், விளம்பரமாக இருந்தாலும், தினமும் தனித்தனியாக கணக்கு ஒப்ப்டைக்க வேண்டும். ரூ.14 லட்சம் அமைச்சர்கள் தங்குவதற்கு அறை ஒதுக்கியதற்கு மட்டும் செலவு செய்துள்ளதாக வேட்பாளர் சத்தியபாம தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாங்கள் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளோம். அதில் வேட்பாளர் ஒப்புதல் வாக்குமூலம் போல வீடியோவில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனவே உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகளை தேர்தல் கண்காணிப்பாளர், தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோரை உடனடியாக தொடர்பு கொண்டு தேர்தல் கணக்கில் அவர் குறிப்பிட்ட ரூ.14 லட்சம் காட்டப்பட்டுள்ளதா, பதிவேட்டில் இது பதிவு செய்யப்பட்டு, அதில் வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ கையெழுத்திட்டுள்ளனரா..? என்பதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

சாதாரணமாக இந்திய தண்டனை சட்டத்தின் படியும், தேர்தல் விதிமுறைபடியும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படியும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் வேட்பாளர் செலவு செய்தார் என்றால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். 3ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது, அதிகபட்சமாக சுமார் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் ரூ.31 கோடி செலவு செய்திருந்தேன். ஒரு பைசா கூட கட்சியில் இருந்து தரவில்லை என சத்தியபாமா கூறியுள்ளார். இது நிரூபணம் ஆனால் அவர் இந்த தேர்தலில் கூட நிற்க்க முடியாது. தேர்தல் அலுவலர்கள் அன்று முறையாக ஆய்வு செய்திருந்தார்கள் என்றால் அவர் இன்று தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். மேலும் அவரை சிறையில் அடைத்திருப்பார்கள், இந்த நிலையில் இன்று புகார் அளித்துள்ளோம். இவ்வாறு கூறியுள்ளார்.