📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 02, 2026 03:03 PM

தாராபுரம் பிரச்சாரத்தில் நாடகம் நடத்தினேனா? சத்தியபாமா காதில் கூறியது என்ன?

தாராபுரம் பிரச்சாரத்தில் நாடகம் நடத்தினேனா? சத்தியபாமா காதில் கூறியது என்ன?

தாராபுரம் பிரச்சாரத்தில் நாடகம் நடத்தினேனா? சத்தியபாமா காதில் கூறியது என்ன? - விளக்கமளித்த ராஜ்மோகன்

என் மீது வைக்கப்படுவது அபாண்டமான குற்றச்சாட்டு. அரசியல் காரணத்திற்காக அடிப்படை ஆதாரம் இல்லாமல் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Published : October 1, 2026 at 1:53 PM IST

சென்னை: தாராபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் நாடகம் நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு அடையாறு மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கடரமணன், வன்னி அரசு, நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மணிமண்டபத்தில் அவரது வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை கண்டுகளித்தனர்.

அதன் பின் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “நடிகர் திலகத்தின் நூற்றாண்டு எட்டிவிடும் தூரத்தில் இருக்கிறது. அண்ணா நாடகத்தில் கணேசனாக அறிமுகமாகி, கருணாநிதி வசனத்தில் நடித்து, ஜெயலலிதாவின் அன்பை வென்றவர். நடிப்பு தான் உயிர் என்று வாழ்ந்தவர். நடிகர் திலகத்தின் நூற்றாண்டு விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்.

இது குறித்து முதலமைச்சர் மற்றும் நடிகர் சங்கத்திடம் கலந்து பேசி உரிய நேரத்தில் முடிவெடுப்போம். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக தராமல் இருக்கும் வெள்ளித்திரை, சின்னத்திரை விருதுகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மொழியில் எடுத்த படங்களுக்கான மானியம் உள்ளிட்டவையும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்

வேட்பாளர் சத்தியபாமா காதில் கூறியது என்ன? - விளக்கமளித்த ராஜ்மோகன்#ministerrajmohan | #CandidateSathyabama | #cmvijay | #tvkgovernment | #dharapuramelection | #ETVBharatTamilNadu pic.twitter.com/oxT4dTIQkS

ஒரு பெண்ணின் கண்ணீரை தவறாக சித்தரிக்கிறார்கள்

அவரிடம் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாடகம் நடத்தியதாக எழுந்த விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, “அங்கு நான் நாடகம் நடத்தியதாக கூறுவது மிகப் பெரிய வன்மம். இதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். கொளுத்தும் வெயிலில் முதலமைச்சரும் மக்களும் வெகுநேரமாக காத்திருப்பதால் ஒருங்கிணைப்பாளர்கள் என்னை தொடர்பு கொண்டு சத்தியபாமாவை சீக்கிரமாக பேசி முடிக்க சொன்னார்கள். அதை தான் நான் அக்காவிடம் ‘Make it Fast’ என்று சொன்னேன்.

திமுக பழசையெல்லாம் மறந்து விட்டதா?

தவெக கூட்டணியில் பாமக இணைகிறதா? என்ற கேள்விக்கு, “தவெகவின் தலைமையிலான மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் ஒருவர் இணைவதென்றால் அந்த முடிவை முதலமைச்சரும் கூட்டணி கட்சியின் தலைவர்களும் கூடி பேசி தான் எடுப்பார்கள்” என்று பதிலளித்தார்.

அதிமுகவில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை விலைக்கு வாங்கியதன் விளைவு தான் இந்த இடைத்தேர்தல் என்ற கனிமொழியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “பழசை எல்லாம் மறந்து விட்டார்களா? முன்னதாக அதிமுகவில் வெற்றி பெற்று திமுகவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் அதே போன்று தான் செய்தார். இதையெல்லாம் அவர்கள் பார்க்கவில்லையா? இம்முறை யாரும் விலைக்கு வாங்கப்படவில்லை. நல்ல தலைமையின் கீழ் மாறி சேர்ந்திருக்கிறார்கள்” என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழாவிற்கு முதலமைச்சர் நிச்சயம் வருவார். திரையுலகில் சிவாஜியை வைத்து தான் எண்ணற்ற நிகழ்வு நடந்தேறியது. பொதுவாழ்க்கையில் அவர் பல நிலைகளை எட்ட முடியாவிட்டாலும் அவர் குழந்தை மனம் கொண்டவர். வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல் எம்.ஜி.ஆரோடு தோள் கொடுத்து நின்றவர்” என்றார்.