SCSS திட்டத்தில் மாதம் 10,000 ரூபாய் வருமானம் வேண்டுமா ? அதற்கான கணக்கீடு இதோ
ஓய்வு பெற்ற பிறகு இத்தனை நாட்கள் தாங்கள் சேமித்த தொகையை முதலீடு செய்து பாதுகாப்புடன் லாபம் பார்க்கவே விரும்புவார்கள். குறிப்பாக 60 வயதை கடந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களுடைய பணம் என்பது பாதுகாப்பாக இருக்கவே நினைப்பார்கள். அதே பாதுகாப்புடன் லாபமும் கிடைக்கும் திட்டங்களாக பார்த்து ஓய்வுபெற்றவர்கள் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் SCSS என சொல்லப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும்.ஓய்வு பெற்றவர்கள் மிகவும் விரும்பி முதலீடு செய்யும் இத்திட்டத்தின் வட்டி விகிதம் 8.2 %.வட்டி அதிகம் என்பதன் காரணமாக தான் ஓய்வு பெற்றவர்கள் தங்களுடைய சேமிப்பை இங்கு டெபாசிட் செய்து அதற்கான லாபத்தை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் SCSS திட்டத்தில் நமக்கு மாதம் 10000 ரூபாய் வருமானம் கிடைப்பதற்கு நாம் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்மாதம் 10000 ரூபாய் வருமான கணக்கீடுSCSS வட்டி தொகையானது காலாண்டிற்கு ஒருமுறை முதலீட்டாளர்களின் வங்கி கணக்கிற்கு தானாக வந்தடையும். ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1, ஜனவரி 1 என ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை முதலீட்டாளர்களின் வங்கி கணக்கிற்கு வட்டி பணம் கிடைக்கும். அப்படி ஒவ்வொரு காலாண்டிற்கும் உங்களுக்கு 30000 ரூபாய் வருமானம் வரவேண்டுமென்றால் நாம் 15 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அவ்வாறு 15 லட்சத்தை டெபாசிட் செய்தால் அதற்கான கணக்கீடு என்ன என்பதை தற்போது பார்க்கலாம்முதலீட்டு தொகை -15 லட்சம்வட்டி -8 .2 %வருடாந்திர வட்டி தொகை -1.2 லட்சம்ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் கிடைக்கும் தொகை -30000 ரூபாய்எனவே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நமக்கு கிடைக்கும் தொகை 30000 ரூபாய் என்றால் மாதத்திற்கு நமக்கு 10000 ரூபாய் 15 லட்ச டெபாசிட் மூலம் நமக்கு கிடைக்கும்இந்நிலையில் ஒரு வருடத்திற்கு 1.2 லட்சம் வட்டி தொகை கிடைக்கும் பட்சத்தில் ஐந்து வருடங்களுக்கு நமக்கு கிடைக்கும் வட்டி தொகை மட்டும் கிட்டத்தட்ட 6 லட்சம். எனவே முதிர்வு காலத்தில் நமக்கு அசல் மற்றும் வட்டி தொகையை சேர்த்து 21 லட்சம் வரை கிடைக்கும்