Rapper Thamizh Aadhavan: “ ’இன்னும் 10 வருஷத்துல வேற லெவல்ல இருப்பீங்க’ன்னு அனிருத் சொன்னார்!”
இன்றைய திரையுலகம் புத்திளைஞர்களின் தனித்துவமான திறமைகளால் களைகட்டுகிறது. அந்த வரிசையில், வேதியியல் பொறியியல் படிப்பை நிறைவு செய்த கையோடு, யுவன், அனிருத், சாய் அபயங்கர் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் விருப்பத்துக்குரிய பாடலாசிரியராகவும், பாடகராகவும் முத்திரை பதித்துவருகிறார் ‘ராப் இன்ஜினீயர்’ தமிழ் ஆதவன். கடலூரிலிருந்து சென்னைக்குக் கல்லூரிப் படிப்புக்காக வந்த இந்த 21 வயது இளைஞன், தமிழ் ராப் உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.
“2026 உங்களுக்குப் பெரிய திருப்புமுனையா அமைஞ்சிருக்கே?”
``ஆரம்பத்துலருந்தே நான் கனவிலும் எதிர்பாராத பல நல்ல விஷயங்கள் வரிசையா நடந்துக்கிட்டிருக்கு. என் தாத்தாவை நினைவுகூர்ந்து நான் உருவாக்கிய சுயாதீனப் பாடல்தான் என்னை வெளியுலகுக்கு அடையாளம் காட்டிச்சு. இந்த ஒரே வருஷத்துல அனிருத் இசையில் ‘ஜெயிலர் 2’ படத்தில் இரண்டு பாடல்கள், சாய் அபயங்கர் இசையில் ‘பத்தா’ன்னு அடுத்தடுத்து வாய்ப்புகள் அமைந்தது பெரும் பாக்கியம்."