📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Malaysia Tamil October 15, 2026 01:04 AM

புகைமூட்டம்: ஃபயர்ஃபிளை விமான சேவை ரத்து நீட்டிப்பு

புகைமூட்டம்: ஃபயர்ஃபிளை விமான சேவை ரத்து நீட்டிப்பு

புகைமூட்டம் காரணமாக சுபாங்-சிலேத்தார் விமானச் சேவை ரத்தை ஃபயர்ஃபிளை நிறுவனம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) வரை நீட்டித்துள்ளது.

முன்னதாக, கடுமையான புகைமூட்டம் காரணமாக கோலாலம்பூரில் உள்ள சுபாங் விமான நிலையத்துக்கும் சிங்கப்பூரின் சிலேத்தார் விமான நிலையத்துக்கும் இடையிலான விமானச் சேவைகளை அக்டோபர் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஃபயர்ஃபிளை ரத்து செய்திருந்தது. அதன்பின்னர், விமானச் சேவை ரத்து அக்டோபர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பயணிகள், சாத்தியமாகும் பட்சத்தில் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் செல்லும் மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் மாற்றி விடப்படுவார்கள் என்று ஃபயர்ஃபிளை நிறுவனம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

மாற்று விமானச் சேவையை விரும்பாத பயணிகள், தங்களது முழுமையான கட்டணத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.