பருவமழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத தவெக அரசு.!! திமுகசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
பருவமழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத தவெக அரசு.!! திமுகசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
சென்னை: தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டையும் கண்டித்து இன்று சென்னையில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பருவ மழையின் தீவிர அபாயங்களை அலட்சியப்படுத்துவதாகவும், மாநகராட்சி பிரதிநிதிகளின் மக்கள் நலப் பணிகளை முடக்குவதாகவும் குற்றம்சாட்டி திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.பி திருச்சி சிவா, சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னை, பாரிமுனையில் நடைபெறும் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளதுடன் ஆளும் தவெக அரசுக்கு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆண்டு பருவமழை மிக அதிமாக இருக்க கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்திருக்க கூடிய சூழலில், மழை நீர் வடிகால் பணிகள், கால்வாய்களை உரிய நேரத்தில் தூர் வருவது போன்ற முக்கியமான எந்த ஒரு முன்னெச்சரிக்கை பணிகளையும் தவெக அரசு மேற்கொள்ளவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர்கள் குற்றம்சாட்டினர். அதே போல முக்கியமான ஆய்வு கூட்டங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.
இதனிடையே கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மேயர் என்கிற முறையில் என்னிடமும், மன்ற உறுப்பினர்களிடமும் ஆலோசிக்காமல், சென்னையில் சொத்துவரியை உயர்த்தியது த.வெ.க அரசு. மக்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, அதிலிருந்து பின்வாங்கியது என சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய மேயர் பிரியா, தி.மு.க ஆட்சியில் சென்னையை மேம்படுத்துவதற்காக மட்டும் ரூ.500 கோடி நிதி வழங்கினார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால், தற்போது மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியைக்கூட விடுவிக்காமல் வஞ்சித்து வருகிறது ஆளும் த.வெ.க அரசு என சாடினார்.