📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 13, 2026 06:34 PM

பருத்தி மூட்டை காமெடி செய்யும் பிசிசிஐ.. அடுத்த தொடருக்கு இந்திய டி20 அணி கேப்டன் யார்?

பருத்தி மூட்டை காமெடி செய்யும் பிசிசிஐ..  அடுத்த தொடருக்கு இந்திய டி20 அணி கேப்டன் யார்?

பருத்தி மூட்டை காமெடி செய்யும் பிசிசிஐ.. அடுத்த தொடருக்கு இந்திய டி20 அணி கேப்டன் யார்?

மும்பை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அனுபவ வீரர் கே.எல். ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய துணை கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர், ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியை வழிநடத்த உள்ளதால் இந்தத் தொடரில் அவர் விளையாட மாட்டார்.அதன்படி, சுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் பொறுப்பை கே.எல். ராகுல் ஏற்பார் எனத் தெரிகிறது.

2023ஆம் ஆண்டு உலககோப்பை தொடருக்கு முன்பு வரை ரோகித் சர்மா இல்லாத போது எல்லாம் கேஎல் ராகுல் தான் அணியை தலைமை தாங்குவார். இதனால் அவர் தான் அடுத்த கேப்டனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சம்பந்தமே இல்லாமல் சுப்மன் கில்லை தேர்வு செய்தனர். தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டன் பொறுப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் வகிக்கும் நிலையில், அவர் வேறு தொடருக்கு சென்தால் மீண்டும் ராகுலை நியமிப்பதற்கு பருத்தி மூட்டை குடோனிலே இருந்திருக்கலாம் என்ற காமெடியை தான் பிசிசிஐ செய்கிறது.

இதனால் ராகுலுக்கு பதிலாக வேறு ஏதும் இளம் வீரருக்கு அந்த பொறுப்பை தரலாம்,தற்கிடையில், இந்தத் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய பிசிசிஐ தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் செப்டம்பர் 16 அன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில், முதன்மை விக்கெட் கீப்பராகச் செயல்பட உள்ள ராகுலுக்குப் பின்னால் இரண்டாவது விக்கெட் கீப்பராக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதற்காக ரிஷப் பந்த் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இதில் தேர்வாகாத மற்றொரு வீரர், அடுத்த மாதம் ஸ்ரீநகரில் நடைபெறவுள்ள ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் 'ரெஸ்ட் ஆஃப் இந்தியா' அணியை வழிநடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் செப்டம்பர் 27, 30 மற்றும் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன் பிறகு 5டி20 போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 6ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 5டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான வீரர்கள் முதல் டி20 போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை.