📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 16, 2026 06:30 PM

பொட்டலத்தில் கஞ்சா; ஆடவருக்குச் சிறை

பொட்டலத்தில் கஞ்சா; ஆடவருக்குச் சிறை

போதைப்பொருள் உட்கொண்டதற்காக 2019ஆம் ஆண்டில் சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டவருக்கு, தற்போது டெலிகிராம் செயலி மூலம் வெளிநாட்டிலிருந்து கஞ்சா வாங்கிய குற்றத்துக்காகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேரந்த 28 வயது ஆண்டன் ஆண்டிரேவ்ஸ்கிக்கு இரண்டு ஆண்டுகள், மூன்ற மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆண்ட்ரேவ்ஸ்கி டெலிகிராம் செயலி மூலம் வாங்கிய கஞ்சா பிரிட்டனிலிருந்து சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் யூனோஸ் சாலையில் உள்ள சிங்போஸ்ட் நிலையத்தில் அந்தக் கஞ்சா பொட்டலத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

தாம் 140 கிராம் கஞ்சா வாங்கியதாகவும் அதற்கு $2,500 செலுத்த இருந்ததாகவும் ஆண்ட்ரேவ்ஸ்கி கூறினார்.

தோ பாயோ வட்டாரத்தில் வசித்து வந்த ஆண்ட்ரேவ்ஸ்கி, அந்த வீட்டில் அவருக்கு முன்பு வசித்தவரின் விவரங்களைப் பயன்படுத்தி கஞ்சாவை வாங்கியதாகத் தெரிவித்தார்.