பிக்பாஸ் முத்துக்குமரன் அப்பாவாக போகிறாரா?.. குழந்தை பெற்றுக்கொள்ளும் வஹிதா?.. புது ஆடியோ
சென்னை: பிக்பாஸ் முத்துக்குமரன் தன்னை ஏமாற்றிவிட்டதாக சொல்லி; சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டிருந்தார் வஹிதா. அதனையடுத்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சென்று புகார் கொடுத்தார். இதனால் தொடர்ந்து கடுப்பான அந்தப் பெண்; தொடர்ந்து வீடியோக்களையும், ஆடியோக்களையும் இறக்கிக்கொண்டே இருக்கிறார். இந்நிலையில் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்பதாவது சீசனில் டைட்டில் அடித்தவர் முத்துக்குமரன். அதனையடுத்து அவரது வாழ்க்கை மாறும் என பலரால் கணிக்கப்பட்டது. அதற்கேற்றபடிதான் அவரும் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக தொடங்கினார். திரைப்படங்களிலும் கமிட்டாகியிருப்பதாக செய்திகள் வந்தன. சூழல் இப்படி இருக்க வஹிதா என்ற பெண் சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
வஹிதா சொன்னது: அந்த வீடியோவில் அவர், "முத்துக்குமரன் பேசி மயக்குவதில் வல்லவர். அவர் பல முறை வீட்டுக்கு என்னை அழைத்து சென்றிருக்கிறார். தாலி கட்டுவதாக சொல்லு உடலுறவும் வைத்திருக்கிறார். ஆயிரம் முத்தங்களை கொடுத்தார். அவரிடமிருந்து உச்சக்கட்ட காதல் கிடைப்பதாகவும், பாதுகாப்பு கொடுக்கிறார் என்றும் நம்பினேன். இனிமேல் வாழ்ந்து என்ன பயன்?' என பல விஷயங்களை பேசியிருந்தார். மேலும் தற்கொலைக்கும் முயன்று நல்வாய்ப்பாக அதிலிருந்து மீண்டுவிட்டார்.
முத்துக்குமரனின் மூவ்: வஹிதாவின் இந்த அடியை எதிர்பார்க்காத முத்துக்குமரன், 'ஏன் வஹிதா அப்படி செய்தார் என கிளாரிட்டி கேட்கிறேன்' என சொல்லிவிட்டு; சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சென்று புகாரும் கொடுத்தார். அதை பார்த்து கடுப்பான வஹிதா மேற்கொண்டு வீடியோக்களையும், ஆடியோக்களையும் இறக்கினார். அதில் ஒரு வீடியோவில், 'அந்தப் பெண்ணை கொஞ்சும் முத்து; இவரிடம் நான் பார்ட் டைம் பாய் ஃப்ரெண்டாக வேலை செய்ய அப்ளை செய்திருக்கிறேன். என்னை செலெக்ட் செய்வார் என நம்புகிறேன்' என கூறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அதேபோல் இன்னொரு ஆடியோவில், வஹிதாவிடம் முத்துக்குமரன், 'நான் உன்னிடம் விளையாட்டுக்கு பேசியதை எல்லாம் இப்படி வீடியோவாக எடுத்து ஷேர் செய்திருக்கிறாயே' என கேட்டார். அதற்கு வஹிதாவோ, 'விளையாட்டுக்கு பேசியதா?.. நண்பர்கள்கூடத்தான் படுக்கையை பகிர்வார்களா?' எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இப்படி தினம் ஒரு விஷயம் முத்துக்குமரன் விவகாரத்தில் நடந்துவருகிறது. அந்தவகையில் இப்போது புதிய ஆடியோ வெளியாகியிருக்கிறது.
வஹிதாவின் ஆடியோ: அதில் அவர், "என்னை அவர் அடிக்கடி கடத்தி செல்வதால் அவரை ராவணன் என செல்லமாக கூப்பிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் ஆதாரம் கிடையாது. ஒரு மாதத்தில் எனக்கு ஏதாவது ஆகிவிட்டால்; அவர் பிள்ளை வந்த பிறகுதான் தெரியும். கடவுளே அந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்துவிடக்கூடாது. ஏன் என்றால் என்னால் முடியாது; இன்னொரு பிரச்னையையும் சந்திக்க முடியாது" என்றிருக்கிறார். இந்த ஆடியோவை கேட்ட ரசிகர்களோ, வஹிதா இதில் என்ன சொல்லவருகிறார் என புரியவில்லை.
ஒருமாதத்தில் ஏதாவது ஆகிவிட்டால் என சொல்லிவிட்டு; அவர் பிள்ளை வரும் என்கிறார். ஒருவேளை கர்ப்பமாக இருக்கும் அவர்; பிரசவ காலத்தை நெருங்கிவிட்டாரோ?.. பிக்பாஸ் முத்துக்குமரன் அப்பாவாக போகிறாரா? என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.