📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 10, 2026 09:03 AM

பெரியபாளையத்தில் தவெக அரசை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

பெரியபாளையத்தில் தவெக அரசை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

பெரியபாளையத்தில் தவெக அரசை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை, அக்.10: பெரியபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இதை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தவெக அரசு அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச வெற்றி பயணம் திட்டத்தை கடந்த 2ம் தேதி முதல் தொடங்கியது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் இலவச பேருந்துகளை இயக்கி ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வை அழிக்கும் இலவச பேருந்து திட்டத்தை அரசு கைவிடக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பெரியபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில் பெரியபாளையம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர்கள் கோபி, மன்சூரலி, சுனில் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக கம்யூனிஸ்ட் வட்ட குழு தலைவர் அருள், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் வேலு சிறப்புரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு மோட்டார் வாகன சட்டத்தை கொண்டு வந்ததால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகிறோம். மேலும் தவெக அரசு வருகின்ற 31ம் தேதிக்குள் இலவச பேருந்து பயண திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், கோட்டையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிடுவோம் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், கன்னிகைப்பேர், வடமதுரை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.