📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 17, 2026 08:01 PM

பேரூர் தமிழ் கல்லூரியில் இட்லி பாட்டிக்கு விருது

பேரூர் தமிழ் கல்லூரியில் இட்லி பாட்டிக்கு விருது

பேரூர்: பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், ‘பெண் சக்தியே முன்னேற்றத்தில் அடித்தளம்’ என்ற தலைப்பில் மகளிர் கருத்தரங்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும், வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த கமலாத்தாள் பாட்டிக்கு, 'அன்பால் ஆளும் அன்னை' என்ற விருதினை வழங்கி, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசுகையில், பெண் சக்தி என்பது வெறும் வார்த்தை அல்ல. அது ஒரு குடும்பத்தின், சமுதாயத்தில் மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதார, கலாசார வளர்ச்சிக்கான அச்சாணி. அவர்கள் தடைகளை தகர்த்து முன்னேறும் போது ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சி பாதைக்கு திரும்புகிறது, என்றார்.