📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 03, 2026 10:00 PM

பால்கி இயக்கும் தமிழ் படத்தில் நாயகியாக அறிமுகமாகும் வித்யா பாலன்

பால்கி இயக்கும் தமிழ் படத்தில் நாயகியாக அறிமுகமாகும் வித்யா பாலன்

ஆர். பால்கி இயக்கவுள்ள புதிய தமிழ் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்தி நடிகை​யான வித்யா பாலன், தமிழில் ‘நேர்​கொண்ட பார்​வை’ படத்​தில் நடித்​திருந்​தார். இப்​போது ‘ஜெ​யிலர் 2’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதையடுத்து அவர் ஆர்​.​பால்கி இயக்​கும் தமிழ்ப் படத்​தில் நாயகி​யாக நடிக்​கிறார். சுமார் 17 ஆண்​டு​களுக்​குப் பிறகு பால்​கி​யுடன் அவர் மீண்​டும் இணைந்​துள்​ளார்.

இயக்குனர் ஆர் பால்கி

இந்தியில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஆர் பால்கி. இவர் நடிகர் தனுஷை வைத்து ஹிந்தியில் ‘ஷமிதாப்’ படத்தை இயக்கியவர். பெரும்பாலும் நடிகர் அமிதாப் பச்சனை வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து ‘சீனி கம்’, ‘பா’ மற்றும் ‘ஷமிதாப்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

முன்​ன​தாக கடந்த 2009-ம் ஆண்டு வெளி​யான ‘பா’ படத்​தில் இரு​வரும் பணி​யாற்றி இருந்​தனர். இந்​தப் புதிய படத்​தின் படப்​பிடிப்பு தொடங்​கி​யுள்​ள​தாகப் புகைப்​படத்​துடன் வித்யா பாலன் தெரி​வித்​துள்​ளார். இப்​படத்​துக்கு இளை​ய​ராஜா இசை அமைக்​கிறார். இது ஒரு பாடகி​யின் பயோபிக் என தகவல் வெளியாகியுள்ளது.