📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 21, 2026 03:04 PM

பாலியல் வன்கொடுமை: சிங்கப்பூரில் 14 ஆண்டு சிறை, பிரம்படி

பாலியல் வன்கொடுமை: சிங்கப்பூரில் 14 ஆண்டு சிறை, பிரம்படி

சிங்கப்பூரில் இளம் வயதுப் பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக 21 வயது ஆடவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 15 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

குற்றம் புரிந்தபோது இளையரின் வயது 15லிருந்து 17 வயதுக்கு இடைப்பட்டிருந்தது. இளையரால் பாதிக்கப்பட்டோர் அப்போது 13லிருந்து 16 வயதுக்கு இடைப்பட்டிருந்தனர்.

காவல் நிலையத்தில் இருந்தபோதும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தபோது அந்த இளையர் ஒருசில குற்றச் செயல்களைப் புரிந்ததாக வழக்கறிகஞர்கள் கூறினர்.

அதைத் தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்டது, வேண்டுமென்ற ஆயுதங்களைக் கொண்டு அடுத்தவர்களுக்குக் காயம் ஏற்படுத்தியது உள்ளிட்ட வன்முறை சார்ந்த குற்றங்களிலும் அவர் ஈடுபட்டார்.

பாலியல் வன்கொடுமை, மானபங்கம் செய்தது, கலவரத்தில் ஈடுபட்டது, ஆயுதம் கொண்டு காயம் விளைவித்தது ஆகிய குற்றங்களைத் திங்கட்கிழமை (செப்டம்பர் 21) அந்த இளையர் ஒப்புக்கொண்டார்.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்பதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், மிரட்டல் விடுத்தது, பாதிக்கப்பட்டோரின் ஆபாசப் படங்களையும் பதிவுசெய்யப்பட்ட காணொளிகளையும் விநியோகம் செய்தது உள்ளிட்ட 29 குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பின்போது நீதிமன்றம் கருத்தில் கொண்டது.

இளையரால் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் ரகசியமாக வைத்திருக்க அவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. குற்றம் புரிந்தபோது 18 வயதுக்குக்கீழ் இருந்ததால் அவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

2020ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து 2022ஆம் ஆண்டு டிசம்பர்வரை சமூக ஊடகங்கள், தெரிந்த நண்பர்கள்மூலம் அவர் இளம் பெண்களைத் தேடியதாகத் தெரிவிக்கப்பட்டது.