📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 16, 2026 02:03 AM

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.32க்கு தான் வாங்கப்படுகிறது: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.32க்கு தான் வாங்கப்படுகிறது: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.32க்கு தான் வாங்கப்படுகிறது: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு விதிகளுக்கு உட்பட்டு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு வாங்கப்படவில்லை, ரூ.32க்கு தான் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதை இன்னும் குறைத்து வாங்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று பேட்டியளிக்கையில் இதை தெரிவித்தார். ‘‘தலைமை செயலகத்தில் மின் தடை ஏற்படுவதற்கான சூழல் இல்லை. பொதுப்பணித் துறையில் மின் இணைப்பில் சிறிய பிரச்னையால் தான் மின்தடை ஏற்பட்டது. அது உடனே சரிசெய்யப்பட்டது’’ என்றும் அவர் கூறினார்.