📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 27, 2026 09:01 PM

ஒரே மாதத்திற்குள் 2 ராஜாக்களை இழந்து விட்டது நம் தமிழ் சினிமா..!

ஒரே மாதத்திற்குள் 2 ராஜாக்களை இழந்து விட்டது நம் தமிழ் சினிமா..!

பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாக்யராஜ் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.