“ஓம் காளி.. ஜெய் காளி” ... முழக்கமிட்ட உதயநிதி.. கொதித்தெழுந்த தமிழக பாஜக... கடும்
“ஓம் காளி.. ஜெய் காளி” ... முழக்கமிட்ட உதயநிதி.. கொதித்தெழுந்த தமிழக பாஜக... கடும் கண்டனம்!
மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
மதுராந்தகத்தில் தேர்தல் பரப்புரையில் இந்துக்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக கடும் கண்டனம் எழுந்துள்ளது.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்
ஓம் காளி.. ஜெய் காளி.. உதயநிதி முழக்கம்
இதில் பேசிய அவர், “முதலமைச்சர் விஜய் தனது உரையின்போது ஓம் சக்தி.. பராசக்தி.. திமுக ஒரு தீயசக்தி” என நம்மை திட்டுவார். அப்போது அவர் எதிர்க்கட்சியாகவும், நாம் ஆளும் கட்சியாகவும் இருந்தோம். விஜய் சொல்வதையெல்லாம் நாம் கேட்டுக் கொண்டிருந்தோம். இப்போது நமக்கு சொல்ல வேண்டிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. திருப்பி தர வேண்டாமா?... ஓம் காளி.. ஜெய் காளி.. தவெக ஒரு ஓடுகாலி என கூறினார். இதை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என கூறினார். உதயநிதியின் இந்த முழக்கம் இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது 'ஓம் காளி, ஜெய் காளி' என்று கோஷமிட்டு பின்னர் த வெ க 'ஓடு காலி' என்று எதிரில் நிற்பவர்களை சொல்லுமாறு தூண்டுகிறார் உதயநிதி ஸ்டாலின்.ஓம் காளி, ஜெய் காளி என்பது ஹிந்துக்களின் நம்பிக்கைகளை, வழிபாடுகளை குறிக்கும் மந்திரம். ஒட்டுமொத்த…
அந்த வகையில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயண் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், “மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் , “ஓம் காளி, ஜெய் காளி” என்று கோஷமிட்டு, பின்னர் தனக்கு எதிரே நிற்பவர்களை “ஓடுகாலி” (தவெகவை நோக்கிய ஒரு ஏளனம்) என்று சொல்லத் தூண்டுகிறார். “ஓம் காளி, ஜெய் காளி” என்பது இந்துக்களின் நம்பிக்கைகளையும் வழிபாட்டையும் குறிக்கும் ஒரு மந்திரமாகும். ஒட்டுமொத்த இந்துக்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக உதயநிதியை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு கேள்வி கேட்கிறேன். இதே முறையில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மத முழக்கங்களைக் கேலி செய்யவும் உதயநிதி ஸ்டாலினுக்குத் துணிச்சல் இருக்கிறதா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி