📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 16, 2026 02:03 AM

மழைநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்; வியாசர்பாடியில் முதல்வர் விஜய் ஆய்வு

மழைநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்; வியாசர்பாடியில் முதல்வர் விஜய் ஆய்வு

மழைநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்; வியாசர்பாடியில் முதல்வர் விஜய் ஆய்வு

வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பேரிடர் கால நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு மண்டல வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published : October 15, 2026 at 8:18 PM IST

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நேரில் பார்வையிட்டு ஆய்வுச் செய்தார்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் உள்ள கால்வாய்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வுச் செய்து பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி, வியாசர்பாடி பகுதியிலுள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றிச் செல்லும் வகையில் மிதவை தூர்வாரும் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்களை அகற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் விஜய் இன்று (அக்.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பேசின் பாலம் பகுதியில் ஓட்டேரி நல்லா கால்வாய் - பக்கிங்ஹாம் கால்வாயுடன் சேரும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வுச் செய்தார்.

ஆய்வின் போது, பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாக அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும், வெள்ளப் பாதிப்புகள் ஏற்படக்கூடிய இடங்களில் தேவையான இயந்திரங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், கால்வாய்களில் நீர்மட்டத்தை இரவு, பகலாகத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என துறைச் சார்ந்த அதிகாரிகளை முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், தலைமைச் செயலாளர் சாய்குமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் சிவா, நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் மு.வடநெரே, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயரதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனிடையே, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்காலில் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், மண்டல வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பேரிடர் கால நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் மண்டல வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.