📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 12, 2026 10:03 PM

முதல்வருக்கு சால்வை அணிவித்ததை கொச்சைப்படுத்த வேண்டாம்: சொல்கிறார் நயினார்

முதல்வருக்கு சால்வை அணிவித்ததை கொச்சைப்படுத்த வேண்டாம்: சொல்கிறார் நயினார்

சென்னை: தமிழக பாஜ மையக்குழு கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடந்தது. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், பிரதமர் மோடியின், 25 ஆண்டு கால பொது சேவையை பாராட்டி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்திய தேர்தல் கமிஷனுக்கு எதிரான, காங்., மற்றும் கரப்பான் பூச்சி கட்சியின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:

சென்னை ஐஐடியில் நடந்த அரசு விழா மேடையில், நான் பங்கேற்றது தொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்துள்ளார். இதற்கு பல உதாரணங்களை நான் சொல்ல முடியும். நான் அதுபற்றி பேச விரும்பவில்லை.

முதல்வரை சார்ந்தவர்களை, நான் விமர்சிப்பதாக அமைந்து விடும். இந்த விவகாரத்தில் பிரச்னை ஒன்றும் இல்லை. ஒரு மாநிலத்திற்கு பிரதமர் வரும் போது, முதல்வர் வரவேற்பது மரபு. அந்த மரபை, முதல்வர் விஜய் கடைப்பிடித்துள்ளார். இதை விமர்சிக்கக்கூடாது.

பிரதமர் மோடியை வரவேற்கும் போது, பாஜ சார்பில், காவி நிறத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. அதை, தவெக விமர்சிக்கிறது. திருவள்ளுவர் தெய்வப் புலவர். அதனால், அவ்வாறு அமைத்துள்ளோம். சென்னை விமான நிலையத்தில், முதல்வர் விஜய்க்கு, நான் சால்வை அணிவித்ததை, சிலர் விமர்சிக்கின்றனர். முதல்வருக்கு செய்யும் மரியாதையை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்.

சென்னையில் செவிலியர்கள் போராட்டத்தை, தமிழக அரசு ஒடுக்குகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன், அமைச்சர் ஆதவ், செவிலியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்; தற்போது எதிர்க்கின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை, தவெக அரசு நிறைவேற்றவில்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.

தற்போது, சென்னை கமலாலயத்தில், திருவள்ளுவர் சிலை காவி நிறத்தில் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.