📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 18, 2026 06:01 PM

முதல்முறை வேலையில் சேருபவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை : EPFO வின் PM-VBRY திட்டத்தின் விதிகள்

முதல்முறை வேலையில் சேருபவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை : EPFO வின் PM-VBRY திட்டத்தின் விதிகள்

முதல்முறையாக வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு அரசு சூப்பர் செய்தி ஒன்றை வழங்கியுள்ளது. EPFO வின் கீழ் செயல்படுத்தப்படும் PM-VBRY திட்டத்தின் மூலம் புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு 15,000 ரூபாய் வரை அரசு நிதி உதவி தருகின்றது. இந்தியாவில் இருக்கும் இளைஞர்களை PF பிடிப்பு உள்ள வேலைகளில் சேர ஊக்குவைப்பதற்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஆனாலும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவுடன் உங்களுக்கு இந்த ஊக்கத்தொகை கிடைத்திடாது. இதனை பெறுவதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகளை நாம் பூர்த்தி செய்த பிறகு தான் இந்த அரசு வழங்கும் ஊக்கத்தொகையை நாம் பெற முடியும்15000 ரூபாய் ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள்1.முதல்முறை EPFO உறுப்பினராக நீங்கள் இருக்க வேண்டியது அவசியம்2.ஆகஸ்ட் 1 2025 முதல் ஜூலை 31 2027 வரை பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்ந்திருக்க வேண்டும்3.மாத சம்பளம் ஒரு லட்சம் வரையில் இருக்கலாம்4.நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் EPFO வில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். மேலும் உங்களுடைய PF சலான்களை தாக்கல் செய்து வர வேண்டும்கணக்கில் பணம் எப்போது வரும் ? நிபந்தனைகள் என்ன ?இந்த அரசு வழங்கும் 15000 ரூபாய் ஊக்கத்தொகை என்பது உங்களுடைய வங்கி கணக்கில் இரண்டு தவணையாக நேரடியாக வந்து சேரும்நீங்கள் தொடர்ந்து ஆறு மாதம் அந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு நீங்கள் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்தால் உங்களுடைய வங்கி கணக்கில் முதல் தவணையாக 7500 ரூபாய் வரவு வைக்கப்படும்மேலும் அதே நிறுவனத்தில் நீங்கள் தொடர்ந்து 12 மாதங்கள் வேலை செய்து வந்தால் இரண்டாவது தவணையாக மீதமுள்ள 7500 ரூபாயும் உங்களுடைய வங்கி கணக்கில் 12 மாதம் முடிவடைந்த பிறகு வந்து சேரும்நாம் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்1.PM-VBRY திட்டத்தின் நன்மைகளை பெறுவதற்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்2.UAN -ஆதார் சரியாக இணைக்கப்பட்டு இருக்கின்றதா ? என பார்க்க வேண்டும்3.உங்களுடைய வங்கி கணக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்4.6 மாதங்கள் வேலை செய்த பிறகு PM-VBRY இணையதளத்தில் இருக்கும் நிதி மேலாண்மை பயிற்சியை முடித்துவிட வேண்டும். அப்போது தான் இரண்டாவது தவணை நமக்கு கிடைக்கும்