முதல்
புதுடெல்லி,
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் முடிதிருத்தும் நிலையத்தின் தரவுகளை திருடியதாக கிஷோர் குமார் என்பவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து கிஷோர் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சய்குமார், சஞ்சய் சச்தேவா அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் கருணாகரன் ஆஜராகி, 'நான் இதற்குமுன்பு புகார்தாரர் தரப்பில் ஆஜராகி வாதிட்டேன். எனவே இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கவுதமன் ஆஜராவார்' என்றார். இதனையடுத்து கவுதமன், காலஅவகாசம் கோரினார்.
அப்போது நீதிபதி சஞ்சய்குமார். 'இந்த வழக்கில் உங்களுக்குள் முடிவுக்கு வரவில்லை. ஆனால் தமிழகத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டி இருந்தாலும் உங்கள் முதல்-அமைச்சர் (விஜய்) சிறப்பாக செயல்படுகிறார். அவரை பற்றி எங்களுக்கு நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்திற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்' என்று தெரிவித்தார். இந்த கருத்தை நீதிபதி சஞ்சய் சச்தேவா ஆமோதித்தார்.