📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 21, 2026 05:04 PM

மதுராந்தகம் இடைத்தேர்தல்: பொதுமக்கள் எதிர்ப்பால் வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

மதுராந்தகம் இடைத்தேர்தல்: பொதுமக்கள் எதிர்ப்பால் வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பால் முக்கிய கட்சி வேட்பாளர்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல்

வேட்பாளர்கள் கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்து உள்ள நிலையில், பிரசாரத்தின்போது சில இடங்களில் வேட்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு சம்பவங்களும் நடந்து வருகிறது.

கூடுதல் பாதுகாப்பு

மேலும் இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள பறக் கும் படையினர் தீவிரமாக வாகன சோதனை நடத்தவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக துண்டு பிரசுரங்கள், சுவரொட்டி கள். பேனர்கள் மற்றும் பணம் உள்ளிட்டவை அதிக அளவில் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இடைத்தேர்தலில் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கூடுதல் விழிப்புடன் செயல்பட்டு, வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.