📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 03, 2026 06:03 AM

மதுபாட்டிலுக்கு கூடுதல் வசூல்; ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

மதுபாட்டிலுக்கு கூடுதல் வசூல்; ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக ஒரே நாளில் 67 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதலாக பணம் வசூலித்த டாஸ்மாக் விற்பனையாளர்கள், உதவியாளர்கள் என மொத்தம் 67 பேர் மீது அமைச்சர் விக்னேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும், கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்ந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக பணம் வசூலிப்பது தொடர்ந்தால் பாரபட்சம் இன்றி நடவடிக்கை என அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்திருந்தநிலையில் ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல் முறை தவறு செய்து கண்டறியப்பட்டால் 3 மாதங்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும். மீண்டும் அதே நபர், அடுத்த முறையும் அதே தவறு செய்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என சட்டசபையில் அமைச்சர் விக்னேஷ் அறிவித்து இருந்தார்.