மண்டாடி படம் மாதிரி இருக்கே.. காற்றை கிழித்து கொண்டு கடலில் சென்ற பாய் மரப்படகு போட்டி
மண்டாடி படம் மாதிரி இருக்கே.. காற்றை கிழித்து கொண்டு கடலில் சென்ற பாய் மரப்படகு போட்டி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா முள்ளிமுனை கிராமத்தில் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டியில் நடைபெற்றது. இப்போட்டியில் 10க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன.
சமீபத்தில் தமிழ் திரையுலகில் நடிகர் சூரி நடித்த மண்டாடி என்ற திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. பாய் மரப்படகு பந்தயத்தை மையமாக வைத்து வெளியான இந்தப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. ஆனால், இந்த வகை பந்தயம் தற்போது அழிந்து வருகிறது.
டீசல் இஞ்சின் படகுகள் வருகையால், தற்போது பாய் மரப்படகுகள் பெரும் அளவு பயன்பாட்டிற்கு இல்லாத நிலையில், இந்த படகு பந்தயம் நடைபெறவில்லை. இந்த சூழலில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இந்த வகை படகு பந்தயம் திருவாடானை தாலுகா முள்ளிமுனை கிராமத்தில் மீண்டும் நடந்தது.
இப்போட்டிக்கு 10 கடல் மைல்கள் தொலைவு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடைபெற்றது.ஒவ்வொரு படகிற்கும் ஏழு நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டார்கள்
இப்போட்டியில் கலந்து கொண்ட படகுகள் காற்றின் வேகத்தில் ஒன்றை ஒன்று முந்தி சென்றதும் படகை காற்றின் திசைக்கு ஏற்றவாறு வீரர்கள் பாய்மரத்தை திருப்ப சுறு சுறுப்பாக வேலை பார்த்தனர் இது பார்வையாளர்களை கவர்ந்தது.
இப்போட்டியை காண சுற்று வட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். முடிவில் இப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பையும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. கேரளாவில் நடைபெறும் படகு பந்தய போட்டி மிகவும் பிரபலம். அதே போல் நமது மீனவ கிராமத்தில் நடைபெறும் இந்தப் பந்தயமும் மிகவும் பிரபலம் ஆக வேண்டும் என்றால் அரசு ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.