📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 10, 2026 09:03 PM

MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!

MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!

MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!

MK Stalin: டெல்லியில் உள்ள தனது எஜமானர்களை திருப்திப்படுத்த தீவிரமாக தவெக அரசு முயன்று வருவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று போராட்டம் அறிவித்திருந்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்து பேரணியில் ஈடுபட முயன்ற முன்னாள் முதல்வர்களான மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜிர்வால், பினராயி விஜயன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் டெல்லியில் தடுப்புகளை அமைப்பதோ, இணைய சேவையை முடக்குவதோ அல்லது அரசியல் தலைவர்களைச் சிறைபிடிப்பதோ இந்திய இளைஞர்களின் எழுச்சியை ஒடுக்க முடியாது என மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஜனநாயகத்தை காப்பவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள், ஆனால் அதற்கு துரோகம் இழைப்பவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்!மக்களின் வாக்குரிமையை காக்கப் போராடும் முன்னாள் முதல்வர்களான பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி மற்றும் மணிக் சர்க்கார், சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரை மத்திய பாஜக அரசு சிறைபிடித்துள்ளது.

இதையும் படிங்க: வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?

சதித்திட்டம் அம்பலம்

அதேவேளையில், தேசத்துரோக செயலுக்காக விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், 'Z+' பாதுகாப்புடன் சுதந்திரமாக வலம் வருகிறார். எவ்வளவு பெரிய அவமானம். SIR-க்கு (தேர்தல் ஆணையர் நியமனச் சட்டம்) பின்னாலுள்ள சதித்திட்டம் முழுமையாக அம்பலமாகிவிட்டது.

இனி அதை மறைக்க முடியாது. டெல்லியில் தடுப்புகளை அமைப்பதோ, இணைய சேவையை முடக்குவதோ அல்லது அரசியல் தலைவர்களைச் சிறைபிடிப்பதோ இந்திய இளைஞர்களின் எழுச்சியை ஒடுக்க முடியாது. ஒரு முழு தேசத்தையும் மத்திய அரசு எவ்வளவு காலத்திற்கு முற்றுகையிலேயே வைத்திருக்க முடியும்?

எஜமானர்களை திருப்திப்படுத்த முயற்சி

இதற்கிடையில், தமிழ்நாட்டில் உள்ள திறமையற்ற TVK அரசு, SIR-க்கு எதிராகவும் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தியும் போராடிய சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் சண்முகம் மற்றும் பிற செயல்பாட்டாளர்களை சிறைபிடித்து, டெல்லியில் உள்ள தனது எஜமானர்களை திருப்திப்படுத்த தீவிரமாக முயன்று வருகிறது. சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், SIR கைவிடப்பட வேண்டும், மேலும் இந்திய மக்களுக்கு துரோகம் இழைத்ததற்கு பொறுப்பான அனைவரும் பொறுப்புக்கூற செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி