📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 27, 2026 05:03 AM

மேயர் பிரியா மீதான விமர்சனம் கனிமொழி எம்பி கண்டனம்

மேயர் பிரியா மீதான விமர்சனம் கனிமொழி எம்பி கண்டனம்

மேயர் பிரியா மீதான விமர்சனம் கனிமொழி எம்பி கண்டனம்

சென்னை: மேயர் பிரியா மீதான விமர்சனத்திற்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தொடர்ந்து கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்படக் கூடாது. ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் ஒரு பெண் நுழைவதே சவாலானது; ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அரசியலில் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொள்வது அதைவிடக் கடினமானது.

இந்தத் தடைகளைத் தாண்டி முன்னேறும் பெண்களை குறிவைத்து தனிப்பட்ட முறையில் தாக்குவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேயர் பிரியா ராஜனுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். “எந்தப் பெண்ணையும் தவறாகப் பேச விடமாட்டேன்” என்று முதல்வர் விஜய் கூறுகிறார். அப்படியிருக்க, மேயர் பிரியா ராஜன் மீது அவரது ரசிகர்களும், அவரது கட்சியினரும் நடத்தும் இந்தத் தாக்குதல்களை எதற்காக அவர் அனுமதிக்கிறார்? இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.