📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 08, 2026 09:03 AM

மேட்டூரில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு டெல்டாவில் விவசாய பணிகள் துவக்கம்

மேட்டூரில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு டெல்டாவில் விவசாய பணிகள் துவக்கம்

காட்டுமன்னார்கோவில்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதி யில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியை ஆர்வத்துடன் துவக்கியுள்ளனர்.

காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம், புவனகிரி தாலுகா டெல்டா பகுதியில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பு காவிரி ஆறு பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு கோடை மழை போதிய அளவு பெய்யாததால் கடும் வெயில் தாக்கம் ஏற்பட்டு வறட்சி ஏற்பட்டது. மேட்டூர் அணை நிரம்பாததால், ஜூன் 12ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி பரப்பு குறைந்தது.

மேலும் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், இந்த ஆண்டு ஒரு போக சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படுமோ என விவசாயிகள் அச்சம் அடைந்தனர். மேட்டூர் அணைக்கு இரு மாதங்களுக்கு பின்னர் தண்ணீர் வரத்து அதிகரித்து, தற்போது அணை நீர் மட்டம் 93 அடியாக உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் நேற்று கல்லணையை வந்தடைந்து, டெல்டா பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளதால், டெல்டா விவசாயிகள் நிம்மதி பெருமூச்சி விட்டுள்ளனர். மேலும் புழுதி உழவு செய்ய ஏற்ற வகையில் பரவலாக மழையும் பெய்துவருகிறது. தற்போது வரும் காவிரி ஆறு தண்ணீர் மற்றும் வடக்கிழகு பருவ மழை தண்ணீரை வைத்து ஓரு போக சம்பா சாகுபடியை செய்துவிடலாம் என்ற நம்பிக்கை விவசாயிகள் இடையே ஏற்பட்டுள்ளது.

இதனால் டெல்டா விவசாயிகள் ஆர்வத்துடன் ஒரு போக சம்பா சாகுபடிக்கான விவசாய பணிகளை து வக்கியுள்ளனர். சம்பா சாகுபடியில் எரு போடுதல், நிலம் சீரமைப்பு போன்ற பராமத்து பணிகள் செய்யப்பட்டு புழுதி உழவு செய்யும் பணியை முழு வீச்சில் துவங்கியுள்ளனர் .

இந்த ஆண்டு எல் நினோ பருவ நிலை மாற்றம், கடும் வெப்ப தாக்கம் போன்றவையால் தண்ணீர் பற்றக்குறை ஏற்படும் நிலை இருப்பதால் விவசாயிகள், உழவுப்பணியை முடித்து அடுத்த வாரம் முதல் குறுகிய கால நெல் ரகங்களை நேரடி நெல் விதைப்புக்கு தயாராகி வருகின்றனர்.

இதனால் டெல்டாவில் ஒரு போக சம்பா சாகுபடி விவசாய பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.