📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 07, 2026 04:01 PM

“காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்”

“காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்”

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் விஜய்.,

“காவல்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது; விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

மாணவர்கள் குற்றத்தில் ஈடுபடாத வகையில் வழிநடத்துவதும் பொறுப்பாகும். சமூக சூழல், குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் குற்றச்செயலில் ஈடுபடும் இளம் வயதினர்;

இதற்கெல்லாம் யார் மீது பழிப்போடலாம் என நினைக்கும் எதிர்க்கட்சியினர் அவர்களுக்கு இணையாக நாமும் 2021-25 வரை நடந்த குற்றச்சம்பவங்களை குறிப்பிட மனம் இடம் தரவில்லை.

கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இதே சட்டசபையில் பல அவமானங்களை சந்தித்தார். இனி பெண்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறாக பேச வேண்டாம். காவல் நிலையத்தில் உயிரிழப்பு என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல, காவல்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும் பிரச்சனை.

மக்கள் பாதுகாப்பிற்காக தங்களது உயிரையும், குடும்ப நலனையும் பொருட்படுத்தாமல் காவலதுறையினர் பணியாற்றுகின்றனர்.

குற்றம் தெருவில் மட்டுமல்ல இணையத்திலும் நடைபெறுவதால், குற்றம் நடக்கும் முன்பே கண்டறிந்து தடுப்பதும் போலீசாரின் கடமை.”

இவ்வாறு அவர் பேசினார்.