World News
May 27, 2026 09:31 PM
காசாவில் ஹமாஸ் ராணுவ பிரிவு தலைவர் படுகொலை; இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேலில் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக சிறைபிடித்து சென்றனர். அவர்களை மீட்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டது.
இதில், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். பலர் புலம்பெயர்ந்து வேறிடங்களுக்கு தப்பி சென்றனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவு தலைவரான இஜ் அல்-தின் அல்-ஹத்தத் என்பவர் கடந்த 16-ந்தேதி, காசா நகரில் நடந்த வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
World News