Latest News
October 12, 2026 03:04 PM
ஜந்தர் மந்தரில் போராட இனி அனுமதியில்லை; மாற்று இடங்களை அறிவித்தது உள்துறை அமைச்சகம்
புதுடில்லி: டில்லியில் அமைதியான முறையில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த, ஜந்தர் மந்தர் பகுதியை பிரதான இடமாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த இடம் நகரின் முக்கிய பகுதியான பழைய பார்லி அலுவலக சாலையில் அமைந்துள்ளதால், போராட்ட சமயங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் இன்று முதல் தடை விதித்துள்ளது. மாறாக, 3 புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ராம்லீலா மைதானம், புராரி மைதானம், கிழக்கு டில்லியில் உள்ள சிபிடி மைதானம் தேர்வாகியுள்ளன.
தேர்வு செய்யப்பட்டுள்ள 3 புதிய இடங்களிலும் போராட்டம் நடத்துவதற்கான, வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.