ஜிவி பிரகாஷ், கயடு லோஹர் நடித்துள்ள ’இம்மார்ட்டல்’ ஆன்லைன் விமர்சனம்
ஜிவி பிரகாஷ், கயடு லோஹர் நடித்துள்ள ’இம்மார்ட்டல்’ ஆன்லைன் விமர்சனம் - தமிழ் சினிமாவின் புதிய முயற்சி வெற்றி பெற்றதா?
ஜிவி பிரகாஷ், கயடு லோஹர், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இம்மார்ட்டல் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Published : September 4, 2026 at 4:34 PM IST
சென்னை: தமிழ் சினிமாவின் முதல் வேம்பயர் திரைப்படம் ’இம்மார்ட்டல்’ (Vampire Film) ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
மாரியப்பா சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கயடு லோஹர், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இம்மார்ட்டல் (Immortal). இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக வேம்பயர் திரைப்படமாக (காட்டேரி) அமானுஷ்ய ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படம் இன்று வெளியான நிலையில், ஆன்லைனில் நெட்டிசன்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இம்மார்ட்டல் திரைப்படம் பார்த்த பிரபல ஆன்லைன் விமர்சகர் ராஜசேகர் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், “படத்தின் இரண்டாம் பாதி எனக்கு பிடித்திருந்தது. அசத்தலான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த படத்தில் வரும் அமானுஷ்ய மிருகம் தத்ரூபமாக அமைந்துள்ளது.
#Immortal - Second half worked well for me. The film is an ambitious attempt with excellent VFX, especially the creature looked flawless and convincing. @gvprakash plays a youngster who stuck in a glittering world set by a jaw dropping gorgeous girl @11Lohar only to realise later… pic.twitter.com/iCu1xOORff
கயடு லோஹரால் கவரப்படும் ஜிவி பிரகாஷ் பின்னர் தன்னை சிக்க வைக்கும் முயற்சி என்பதை உணர்கிறார். பின்னர் த்ரில்லர் ஜானரில் சர்ப்ரைசான கிளைமாக்ஸ் உடன் முடிகிறது. ஜிவி பிரகாஷ், கயடு லோஹர் ஆகியோர் நன்றாக நடித்துள்ளனர். கண்டிப்பாக தமிழ் சினிமாவில் இது புதிய முயற்சி. சாம் சிஎஸ் இசை கிளைமாக்ஸ் காட்சிகளில் சிறப்பாக அமைந்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.
#Immortal [3.75/5] : Starts off as a Romantic movie.. Soon becomes a Fantasy thriller.. Ends as a Survival thriller..A good one.. 👍 @gvprakash has done well as he has to show various emotions as movie changes genre..@11Lohar at her best.. Playing a seductress to a… pic.twitter.com/ECbQnmvW4L
ரமேஷ் பாலா வெளியிட்டுள்ள விமர்சனத்தில், ”ரொமாண்டிக் படமாக தொடங்கி, பின்னர் ஃபேண்டஸி த்ரில்லர் ஜானரில் முடிகிறது. ஜிவி பிரகாஷ் பல்வேறு உணர்ச்சிகளை தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி கவர்கிறார். கயடு லோஹருக்கு இது ஒரு சிறப்பான திரைப்படம். ஒரு ஃபேண்டஸி கலந்த கதாபாத்திரத்தை படம் முழுக்க கொண்டு செல்வது எளிதல்ல. சாம் சிஎஸ் பின்னணி இசை அசத்தலாக உள்ளது. உங்களுக்கு த்ரில் மற்றும் சர்ப்ரைஸ் வேண்டும் என்றால் இம்மார்ட்டல் திரைப்படம் பார்க்கலாம்” என கூறியுள்ளார்.
Dear @11Lohar - this is the best role that you have done in Tamil cinema so far !You should thank the director for giving you such a meaty role where you dominate with your expressions. #Immortal
விமர்சகர் பிரசாந்த் வெளியிட்டுள்ள விமர்சனத்தில் ”கயடு லோஹர் இந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரது திரை வாழ்க்கையில் நடித்த சிறப்பான கதாபாத்திரம். அவர் இயக்குநருக்கு கண்டிப்பாக இதுபோன்ற கதாபாத்திரம் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கயடு லோஹர் தனது நடிப்பின் மூலம் கவர்கிறார். இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை வரவேற்பை பெறும் ” என கூறியுள்ளார்.