ஜெயிலர் 2 எடிட்.. அப்போ சி.எம்.. இப்போ ஃபகத் பாசில்.. வம்புக்கு போகாதவரை இப்படி ஆக்கிட்டாங்களே
திருவனந்தபுரம்: மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பேமஸான இயக்குனர் பாசில் அவரது மகன் பகத் பாஸில் அவர் தற்போது இந்திய அளவில் பேமஸான நடிகராக இருக்கிறார். ஃபாசில் இயக்கத்தில் கையெத்தும் தூரத் படத்தின் மூலம் அறிமுகமான அவருக்கு ஆரம்பத்தில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை இருந்தாலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார் இதன் காரணமாக மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம்வருகிறார்.
இந்திய சினிமாவில் சிறந்த நடிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார். ஆனால் கண்கள், உடல் மொழி என அனைத்திலும் நடிக்கும் ஹீரோக்கள் குறைந்துவருகிறார்கள். ஆனால் ஃபகத் பாசிலோ அதனை மிகத் திறமையாக கையாண்டு வருகிறார் எனவே அவரது நடிப்பை விட அவரது கண்களுக்கு என்று ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அலட்டல் இல்லாத நடிப்பு அவரது டயலாக் டெலிவரி பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கிறார்.
தமிழிலும் ரகளை: அவரது ஒவ்வொரு படத்துக்கும் இடையேயும் ஏதோ ஒரு வித்தியாசம் கண்டிப்பாக இருக்கும். தமிழிலும் அவர் வேலைக்காரன், மாமன்னன், வேட்டையன், மாரீசன், இதயம் முரளி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். முதல் படத்துக்கும் அடுத்த படத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. சைலெண்ட்டாக சம்பவம் செய்யும் சம்பவக்காரன் என்றே பெயர் எடுத்தவர் அவர்.
பெண்கள் மத்தியில் க்ரஷ்: வில்லனாக நடித்தாலும் பெண்கள் மத்தியில் க்ரஷ்ஷாக மாறுவது அபூர்வம்தான். அந்த அபூர்வத்தில் ஒருவராக இருக்கிறார் ஃபகத். தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பெண்களுக்கு அவர் க்ரஷ் மெட்டீரியல் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை நஸ்ரியா நசீமை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; சிறந்த கணவராகவும் ஜொலித்துவருகிறார்.
ஃபகத்தின் பிளான்: ஃபகத் பாசில் எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர். தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்று இருப்பவர். ஷூட்டிங் முடித்தால் நேரே வீட்டுக்கு செல்லும் பழக்கமுடைய அவர்; ஒரு பிளானையும் வைத்திருக்கிறார். சினிமாவில் மார்க்கெட் போனாலோ அல்லது சினிமாவிலிருந்து விலகினாலோ அதற்கு ஸ்பெயின் நாட்டில் இருக்கும் பார்சிலோனாவில் டாக்சி ஓட்ட வேண்டும் என்பதுதான் அது. அவரது அந்த ஆசை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயிலர் 2 எடிட்டில் ஃபகத்: இப்படி எந்த வம்பு தும்புக்கும் போகாமல் வேறு பிளானில் இருக்கும் அவரை இப்போது ட்ரெண்டிங்கில் இழுத்து வந்து விட்டிருக்கிறார்கள் ரசிகர்கள். அதாவது ஜெயிலர் 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் 'அல்ல பொல்லேல்லோ' பாடலில் ஏஐ மூலம் ஃபகத் பாசில் நடனம் ஆடும்படி உருவாக்கியிருக்கிறார்கள். ஏற்கனவே கேரள முதலமைச்சர் சதீசனை அப்படி ஆட விட்டிருந்தது கவனிக்கத்தக்கது. இப்போது இந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.