இந்திய ராணுவ 'லடாக்' கர்னலாக வத்திராயிருப்பு விஜயகுமார் தேர்வு
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை சேர்ந்த விஜயகுமார், 40, கடந்த 2008ல் யு.பி.எஸ்.சி.,யுடன், இந்திய ராணுவம் இணைந்து நடத்திய டிபன்ஸ் தேர்வில் வெற்றி பெற்று, பணியில் சேர்ந்தார். லடாக் யூனியன் பிரதேச பொறுப்பு அதிகாரியாக பதவியேற்றார்.
காலாட்படை மேஜராக பதவி உயர்வு பெற்று, ஹைதராபாத், ராஜஸ்தான், வெலிங்டன், மேற்கு பிராந்தியம் உட்பட பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்தார். 2016ல், கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலின்போது முக்கிய பங்காற்றினார்.
கடந்த 2018ல் ஐக்கிய நாடுகளுக் கான அமைதிப்படையில் தேர்வாகி, லெப்டினன்ட் கர்னலாக சூடான் நாட்டில் ப ணிபுரிந்தார் தற்போது, பதவி உயர்வு பெற்று, லடாக் ஸ்கவுட் பிரிவு கர்னலாக பொறுப்பேற்றார்.
ஜெய்ப்பூரில் நடந்த வி ழாவில், முந்தைய கர்னல் ரஞ்சன் குமார், தன் பொறுப்புகளை விஜயகுமாரிடம் ஒப்படைத்து, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
விஜயகு மார் கூறுகையில், ''கிராமப்புறங்களில் இருந்தும் உயர் பதவிக்கு வரலாம் என்பதற்கு உதாரணமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து தான் இந்த பதவிக்கு வந்துள்ளேன். அரசு பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கையோடு படித்தால், நிச்சயம் உயர் பதவியை அடையலாம்,'' என்றார்.