📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 07, 2026 09:00 AM

IND vs ENG: சிஎஸ்கே வீரருக்கு அடித்த ஜாக்பாட்.. இந்திய ஒருநாள் அணியில் இடம்.. நிதிஷ் ரெட்டி அவுட்

IND vs ENG: சிஎஸ்கே வீரருக்கு அடித்த ஜாக்பாட்.. இந்திய ஒருநாள் அணியில் இடம்.. நிதிஷ் ரெட்டி அவுட்

IND vs ENG: சிஎஸ்கே வீரருக்கு அடித்த ஜாக்பாட்.. இந்திய ஒருநாள் அணியில் இடம்.. நிதிஷ் ரெட்டி அவுட்

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், காயமடைந்த ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சிஎஸ்கே வீரரும், தற்போதைய இந்திய டி20 அணியின் ஆல்-ரவுண்டருமான சிவம் துபே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை டி20 வீரர் என்றே அடையாளப்படுத்தப்பட்டு வந்த நிலையில் சிவம் துபேவுக்கு இந்திய ஒருநாள் அணியில் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது நிதிஷ் குமார் ரெட்டிக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து அவர் இன்னும் முழுமையாக மீளாததால், தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டி20 தொடர் மற்றும் வரவிருக்கும் ஜிம்பாப்வே தொடர் ஆகியவற்றிலிருந்து ஏற்கனவே விலகியிருந்தார். தற்போது இங்கிலாந்து ஒருநாள் தொடரிலிருந்தும் அவர் விலகி இருக்கிறார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்து டி20 தொடரில் விளையாடி வரும் சிவம் துபே அணியில் நீடிப்பார் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

இரண்டு முறை டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சிவம் துபே, இதுவரை 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43 ரன்களும், 1 விக்கெட்டும் எடுத்துள்ளார். அவர் கடைசியாக 2024 ஆகஸ்ட்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இங்கிலாந்து தொடரை முடித்துக் கொண்டு அவர் ஜிம்பாப்வேக்கு புறப்பட்டுச் செல்வார். அங்கு ஜூலை 23 முதல் டி20 போட்டிகள் தொடங்கவுள்ளன.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஜூலை 14 அன்று பர்மிங்காமிலும், இரண்டாவது போட்டி ஜூலை 16 அன்று கார்டிஃபிலும், மூன்றாவது போட்டி ஜூலை 19 அன்று லார்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

இங்கிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார், சிவம் துபே.