📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News May 29, 2026 09:00 PM

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: ஓமனுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: ஓமனுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தின. ஈரான் மீது போரைத் தொடங்கியதில் இருந்து, உலக அளவில் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக ஈரான் முன்மொழிந்த ஒப்பந்தத்தை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். எனினும், மற்றொரு பக்கம் மீண்டும் இருநாடுகளும் தாக்குதலை தொடங்கியுள்ளன.

ஓமனுக்கு எச்சரிக்கை

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஓமனுடன் சேர்ந்து கூட்டாக நிர்வகிக்க இருப்பதாக ஈரான் முன்மொழிந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், சர்வதேச சட்டத்தின்படி ஹார்முஸ் ஜலசந்தியை யாரும் கட்டுப்படுத்த முடியாது. ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது குறித்த ஈரானின் முன்மொழிவை நிராகரிக்கிறேன். ஓமனும் மற்றவர்களைப்போலவே நடந்துகொள்ளும். இல்லையென்றால், நாம் அவர்களைத் தகர்க்க வேண்டியிருக்கும்" என எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாக இருந்துவரும் ஓமன், அமெரிக்க இராணுவ ஒத்துழைப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தனது நட்பு நாட்டிற்கே டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.