சவுதி அரேபியாவுக்கு அக் 17 வரை விமான சேவை ரத்து; இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
- நமது நிருபர் -
சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்களில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒரு இந்தியர் உட்பட 13 பேர் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதல் சம்பவத்தால் விமான சேவையை ரத்து செய்தாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தது.
அதன் அறிக்கை: சவுதி அரேபியாவின் ரியாத், ஜித்தா, தம்மாம், மதீனாவிற்கு செல்லும் மற்றும் அங்கு இருந்து இயக்கப்படும் விமான சேவை அக்டோபர் 17ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்பு அதிகாரப்பூர்வ இணையத்தில் விமான சேவை குறித்து சரிபார்க்க வேண்டும்.
பயணிகளின், பாதுகாப்பும், நல்வாழ்வும் எங்களுக்கு முக்கியம்; பாதுகாப்பான விமான சேவையை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியாத், தம்மாம், ஜித்தா ஆகிய இடங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமான சேவைகளை அக்டோபர் 17ம் தேதி வரை ஏர் இந்தியா நிறுவனமும் ரத்து செய்துள்ளது.