📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 08, 2026 09:03 PM

சட்டசபையை நடத்திய அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம்

சட்டசபையை நடத்திய அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம்

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் (செவ்வாய்கிழமை) நிறைவடைகிறது. பொதுவாக, சட்டசபையை சபாநாயகர் நடத்துவார். அவர் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார். இருவரும் அவையில் இல்லாத நேரத்தில் மாற்றுத் தலைவர்களில் ஒருவர் அவையை நடத்துவார்கள்.

அந்த வகையில், புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசில், சட்டசபை மாற்றுத் தலைவர்கள் பட்டியலில் எதிர்க்கட்சியினருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில், கூட்டணி கட்சிகளுக்கு மாற்றுத் தலைவர்கள் பொறுப்பு வழங்கப்பட்டதே தவிர, எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படுவதில்லை.

த.வெ.க. அரசு இந்த நடைமுறையை மாற்றியமைத்த நிலையில், சட்டசபை நிறைவு நாளான இன்று சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில் மாற்றுத் தலைவரான அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் அவையை நடத்தினார். உறுப்பினர் இருக்கையில் இருக்கும் காரசார விவாதங்களில் தளவாய் சுந்தரம் பங்கேற்றாலும், சபாநாயகர் இருக்கைக்கு வந்ததும் நடுநிலையோடு நடத்தினார்.