📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 11, 2026 09:02 PM

சந்தானம், விஜய்சேதுபதி சீன்ஸ் மொத்தமும் டெலிட்.. ரஜினியின் ஜெயிலர்2 சீக்ரெட்டை போட்டுடைத்த பிரபலம்

சந்தானம், விஜய்சேதுபதி சீன்ஸ் மொத்தமும் டெலிட்.. ரஜினியின் ஜெயிலர்2 சீக்ரெட்டை போட்டுடைத்த பிரபலம்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடித்த சந்தானம் மற்றும் விஜய் சேதுபதியின் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பேசியுள்ள சித்ரா லட்சுமணன், சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில் பேசிய அவர், ரஜினிகாந்த் எந்த துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை மனதார பாராட்டக்கூடியவர். மற்றவர்களை பாராட்டுவதில் அவர் ஒருபோதும் தயக்கம் காட்டுவதில்லை. அதேபோல், இயக்குநர் நெல்சனுக்கும் ரஜினிகாந்துக்கும் இடையிலான நட்பு மிகவும் இயல்பானதாக உள்ளது. இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்களை போல பழகி வருகின்றனர். ரஜினிகாந்துடன் அந்த அளவுக்கு நெருக்கமாக பழகும் வாய்ப்பை பெற்றிருப்பது நெல்சனின் சாதனை தான்.

ஜெயிலர் 2: படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடைபெறாததால், ரஜினிகாந்தின் நிகழ்ச்சிக் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், அனைவரும் பேசியது மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஆனால், அந்த படத்தில் நடித்த பல நடிகர்கள் அதில் கலந்து கொள்ளவே இல்லை. குறிப்பாக சந்தானம், விஜய்சேதுபதி என யாருமே கலந்து கொள்ளவே இல்லை. விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகியோர் படத்தில் நடித்திருந்தும், அவர்களுடைய காட்சி ஒன்று கூட டிரெய்லரில் இடம்பெறவில்லை.

காட்சிகள் நீக்கம்: இதுகுறித்து விசாரித்தபோது, படத்தின் நீளத்தை கருத்தில் கொண்டே சில காட்சிகள் நீக்கப்பட்டு விட்டது தெரியவந்தது. இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் நீளமும் முக்கியமான காரணியாக இருப்பதால், தேவையற்ற நீளத்தை குறைப்பதில் படக்குழுவினர் கவனம் செலுத்தி உள்ளனர். மேலும், நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் படத்தில் சேர்த்திருந்தால், படத்தின் மொத்த நீளம் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாகலாம் அதனால் தான் சில காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் காட்சியை பொறுத்தவரை, படத்தின் இறுதி பகுதியில் வரும் ஒரு முக்கியமான காட்சியில் அவர் வந்து செல்கிறார். அவர்களுடைய காட்சிகள் நீக்கப்பட்டிருப்பது அவரின் ரசிகர்களுக்கு சற்று கவலையான விஷயம் தான். ஆனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாத அளவிற்கு படம் சிறப்பாக வந்து இருக்கு என சித்ரா லட்சுமணன் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.